ஓபிஎஸ் - இபிஎஸ் இணைவு சாத்தியமா? இபிஎஸ்ஸை அழைத்த ஓபிஎஸ்..! கண்டுகொள்ளாத இபிஎஸ்..! 

ஓபிஎஸ் - இபிஎஸ் இணைவு சாத்தியமா? இபிஎஸ்ஸை அழைத்த ஓபிஎஸ்..! கண்டுகொள்ளாத இபிஎஸ்..! 

அதிமுக பொதுக்குழு வழக்கிற்க்கு பின்னர் ஓபிஎஸ் கூறியுள்ள ஒரு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது. 

அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு:

ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக்குழுவை ரத்துசெய்ய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, பல கட்ட விசாரணைகளுக்கு பின்னர் நீதிபதி மாற்றம் செய்யப்பட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னர் நேற்று விசாரணைக்கு வந்த பொது, ஜூலை 11 இல் நடந்த அதிமுக  பொதுக்குழு செல்லாது எனவும், ஜூன் 23 க்கு முன்பு இருந்த நிலையே தொடரும் எனவும் தீர்ப்பளித்தார்.

மேலும் படிக்க: அதிமுக ஒபிஸ்க்கு... அதிமுக அலுவலக சாவி யாருக்கு? 2 ஆப்ஷன்கள்..!

ஓ.பன்னீர்செல்வம்:

நீதிமன்றத் தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதகமாக வந்ததை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வரும் வேளையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.

அன்பு சகோதரர்:

செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியை அன்பு சகோதரர் என குறிப்பிட்ட பன்னீர்செல்வம், நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், அதை எல்லாம் மறந்து அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் எனக் கூறி இபிஎஸ்க்கு அழைப்பு விடுத்துள்ளார். 

அம்மாவின் குடையின் கீழ் உள்ளவர்கள்:

அனைவரும் இணைந்து செய்லபட வேண்டும் என்பது மட்டுமே எங்கள் எண்ணம், யாராக இருந்தாலும் கட்சி விதிகளை ஏற்றால் சேர்த்துக்கொள்ள படுவார்கள் எனக் கூறியுள்ளார், மேலும், இதில் சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் அடங்குவர். அவர்கள் எங்களுடன் வர வேண்டும் எனபதும் இல்லை, நங்கள் செல்ல வேண்டும் எனபதும் இல்லை, இணைந்து செயல்பட வேண்டும் என அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார் ஒபிஸ்

கண்டுகொள்ளாத இபிஎஸ்:

அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என ஓபிஎஸ் கூறி வரும் வேளையில், ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் எட்டப்படி பழனிசாமி. 

மேலும் படிக்க: திமுகவை ஆதரிக்கிறாரா ஓபிஎஸ்...முன்னாள் அமைச்சர் சர்ச்சை பேச்சு!

ஓபிஎஸ் - இபிஎஸ் இணைவு சாத்தியமா?

ஆரம்பத்தில் இருந்தே இரட்டை தலைமையே தொடரட்டும் என கூறி வருகிறார் இபிஎஸ், ஒற்றைத் தலைமை வேண்டும் என கூறி வருகிறார் இபிஎஸ்.  ஒன்றினைத்து செயல்படுவோம் என்ற ஓபிஎஸ் அழைப்பை இபிஎஸ் ஏற்றுக்கொள்வது சந்தேகமே என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

காரணம் என்ன?:

ஓபிஎஸ் தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். இபிஎஸ் மீண்டும் ஓபிஎஸ் உடன் இணைந்தால், ஓபிஎஸ், சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை அதிமுகவிற்குள்கொண்டு வரக்கூடும், என்பது முக்கிய காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

மீண்டும் அதிமுகவில் ஒரு குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது, என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.