புதிய வியூகத்தை கையில் எடுக்கும் ஓபிஎஸ் – ஷாக்காகியுள்ள ஈபிஎஸ்… அடுத்து என்ன?

புதிய வியூகத்தை கையில் எடுக்கும் ஓபிஎஸ் – ஷாக்காகியுள்ள ஈபிஎஸ்… அடுத்து என்ன?

அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

பொதுக்குழுவிற்கு தடை கோரி வழக்கு:

ஜூலை 11 இல் அதிமுக பொதுக்குழு நடத்த தடை விதிக்க வேண்டும் என அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஜூலை 11 காலை 9 மணிக்கு அந்த வழக்கை விசாரித்த  தனி நீதிபதி, கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க முடியாது. சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அதிமுக பொதுக்குழு.

கடந்த ஜூலை 11 , காலை 9.15 க்கு அதிமுக பொதுக்குழு, செயற்குழுக்க கூட்டம், சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கி விட்டு, பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலின் பேரில், அதிமுகவின் இடைகாலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டார். 

உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு:

உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியின் தீர்ப்பது எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழங்கி விசாரித்த உச்சநீதிமன்றம், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கும் எனவும், வழக்கை 2 வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டது. 

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி, அதிமுக பொதுக்குழு வழக்கை தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி  ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் விசாரிக்கவுள்ளார்.

மேலும் படிக்க: https://www.malaimurasu.com/search?q=%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95&sys_lang_id=1

வேறு நீதிபதி விசாரிக்க கோரிக்கை மனு;

இந்த வழக்கு விசாரணையை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இல்லாத வேறு நீதிபதிக்கு மற்ற வேண்டும் எனக் கோரி ஓபிஎஸ் தரப்பில் இருந்தும், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில் இருந்தும் உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மனுவில் கூறப்பட்டது:

அந்த மனுவில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில், ஜனநாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பம் தான் மேலோங்கி இருக்கும். அவர்கள் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற முடியாதரவர்கள் நீதிமன்றங்களை கருவியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதாக மனுதாரர்களை குற்றம்சாட்டியுள்ளார்.

மற்றொரு மனுதாரரான ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் பொதுக்குழுவை அணுகாமல், ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நடுவதாகவும், நீதிமன்றம் மூலம் சாதிக்க முயர்ச்சிப்பதாகவும் தெரிவித்து இருப்பது வழக்குக்கு தொடர்பில்லாத கருத்துக்களாகும்.

எனவே, அதிமுக பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்கக்கூடாது. வேறொரு நீதிபதி விசாரணைக்கு மாற்றவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. 

உடன்பாடு இல்லை;

வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை. இருப்பினும் வேறு நீதிபதிக்கு மாற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட நீதிபதியின் கருத்தை அறிந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

இன்று விசாரணை:

இன்று வழக்கு, விசாரணைக்கு வரும் பொழுது, தனி நீதிபதி மாற்றப்படுவாரா? அல்லது நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியே வழக்கை தொடர்வாரா? என்பது அரசியல் வட்டாரத்தில் பெரிதும் பேசப்படும் ஒன்றாகியுள்ளது.