புரட்சியாளர் அம்பேத்கருக்கு செம்மாந்த வீரவணக்கம்

புரட்சியாளர் அம்பேத்கரின் 66 நினைவுநாள் இன்று திசம்பர் 6, 1956 மறைந்தார் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர்.

புரட்சியாளர் அம்பேத்கருக்கு  செம்மாந்த வீரவணக்கம்

 அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாளை போற்றும் விதமாக  சமூக வலைதளங்களில் நினைவஞ்சலியும் அம்பேத்கரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திரமோடி 

மகாபரிநிர்வாண் தினத்தில் அம்பேத்கர் நமது நமது நாட்டுக்கு ஆற்றிய சிறப்பான் சேவையை நினைவுகூர்ந்து நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் அவரது போராட்டங்கள் லட்சக்கணக்கானோருக்கு நம்பிக்கையை அளித்தது. மிக விரிவான அரசியல் சாசனத்தி இந்தியாவுக்கு அளிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஒருபோதும் மறக்க முடியாதவை என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி. 

முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர்; சமத்துவத்தை நோக்கிய போராட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார்; புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம்.

 

தொல். திருமாவளவன் 

புரட்சியாளர் அம்பேத்கருக்கு எமது செம்மாந்த வீரவணக்கம்!சங்பரிவார் சனாதனத்தை முறியடிப்போம்!சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்போம்.

கனிமொழி எம்.பி

அண்ணல் #Ambedkar அவர்களின் 66-வது நினைவுநாள் இன்று. தன் வாழ்வெல்லாம் சமூகநீதி காக்கப் போராடிய புரட்சியாளரை, நவீன இந்தியாவின் சிந்தனை பெருவூற்றாக விளங்கிய மாமேதையின் நினைவைப் போற்றிடுவோம். அவர் தந்த அரசியலமைப்புச் சட்டத்தைப் பேணி, அவர் வழியில் சமூகநீதி காத்திடுவோம்.

அண்ணாமலை

மதங்களைக் கடந்த மாமனிதர், மனங்களை நேசித்த மாண்புக்குரியவர், நமக்கான அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்.

அன்பு, அறிவு, ஆற்றல், ஆளுமை மிக்க பாரத ரத்னா அண்ணல் பீம்ராவ் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான இன்று அவர் தேசத்திற்காக ஆற்றிய நற்பணிகளை நினைவு கூறுவோம் டிவிட்டரில் பதிவிட்டும் மரியாதை செலுத்தினார்கள்.