மொத்த பாஜகவுக்கும் ஒரே ஆள் பிடிஆர் தான்... சமாளிக்க முடியாமல் திணறல்!! ஸ்டாலின் பயங்கர ஹேப்பி...

மொத்த பாஜகவுக்கும் ஒரே ஆள் பிடிஆர் தான்... சமாளிக்க முடியாமல் திணறல்!! ஸ்டாலின் பயங்கர ஹேப்பி...

பாஜகவை புரட்டி எடுக்க வந்துவிட்டார் தமிழக நிதியமைச்சர் பி.டிஆர். பழனிவேல் தியாகராஜன்… கொஞ்சநஞ்சமல்ல மத்திய அரசு விமர்சிக்கும் ஒவ்வொன்னுக்கும் தக்க பதிலடி, அதிலும் புள்ளி விவரங்களுடன் பதிலடி கொடுத்து வருவதால் பாஜக அரசு திண்டாடி வருகிறது.

அண்மையில், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களின் உரிமை, கூட்டாட்சி முறை தொடர்பாகவும் மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக பேசினார் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். சும்மா புள்ளி விவரங்களுடன் புட்டு புட்டு வைத்ததால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே அதிர்ந்துபோனார். 

அனல் பறக்கவிடும் அடுக்கடுக்கான கேள்விகள், தொடர்ந்த குற்றச்சாட்டுகளால் மத்திய நிதியமைச்சர் மட்டுமல்ல, அங்கிருந்த யாராலும் பதில் கூறமுடியவில்லை. இறுதியாக தமிழக மக்களின் சார்பாக இக்கருத்துக்களை பதிவு செய்ய வாய்ப்பளித்தமைக்கு எனது நன்றியினை அம்மையீர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கூறிவிட்டு அவர் பெருமூச்சு விட்டாரோ இல்லையோ, அனைவரும் சற்று மூச்சுவிட்டு நிம்மதியடைந்தனர்.

அந்த அளவிற்கு தனது புள்ளிவிவர கேள்விகளால் திண்டாட வைத்த பி.டி.ஆர் தியாகராஜன், பாஜக நிர்வாகிகளையும் விட்டு வைக்கவில்லை. அண்மையில், இந்து சன்னியாசிகளை பற்றி பேசினால் அவர்களின் பின்னணி குறித்து நோண்டப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்., தியாகராஜனுக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எச்சரிக்கை விடுத்திருந்தார். 

இந்த நிலையில், கொரோனா சம்பந்தமாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிதியமைச்சரிடம் ஹெச். ராஜா கருத்து குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு காட்டமாக பதில் அளித்த அவர், தகுதியுள்ள நபர்கள் சொல்கிற கருத்து, விமர்சனங்கள் குறித்து தன்னிடம் கேளுங்கள் என்றும், அதைவிட்டுட்டு,  வெறிப்பிடிச்ச நாய் குரைப்பதற்கெல்லாம் தன்னால் பதில்கூறமுடியாது என்றும் காட்டமாக கூறினார். இந்த பேச்சிற்கு பாஜக தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில், எதையும் காதில் வாங்காத பி.டி.ஆர் மற்ற வேலைகளை பார்க்க சென்றுவிட்டார்.  

எனினும் சும்மா இருக்காத பாஜகவினர், ஈஷா விவகாரத்தில் தலையிட்டதால், அமைச்சர் பிடிஆரின் குடியுரிமை குறித்து ஆராய ஆரம்பித்தனர். அதில், இந்திய குடியுரிமையை ரத்து செய்து, OCI card holder கொண்ட பி.டி.ஆரை நாடு கடத்த வேண்டும் எனவும், அவரை சிறையில் அடைக்க வேண்டும் எனவும் பாஜகவினர் கூறி வருகின்றனர். 

இதை அறிந்த அமைச்சர் பிடிஆர், ’’இந்த முட்டாள்களுக்கு மாட்டு மூத்திரம் குடித்து குடித்து பைத்தியம் பிடித்திருக்கு…..OCI வாக்களிக்க கூட முடியாது விஞ்ஞானி. வரம்பற்ற முட்டாள்தனம் சிரித்துக்கொண்டே தரையில் உருள வேண்டியதுதான்.’’என்று கருத்து தெரிவித்துள்ளார்.
சரி, ஹெச் ராஜாவுடன் இந்த பஞ்சாயத்து முடிந்தது என நினைத்தால் அது வானதி ஸ்ரீனிவாசன் வரை நீண்டது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கோவாவிற்கு எதிராகவும் அந்த மாநிலத்தை அவமதித்ததும் தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதால், கோவாவை அவமதித்த பிடிஆர் கோவா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த மாநில அமைச்சர் கேட்டுக் கொண்டார். 

இந்த விவகாரம் குறித்து பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் தனது ட்விட்டரில், ஜிஎஸ்டி கவுன்சிலில் பி.டிஆர் பழனிவேல் தியாகராஜன் நடந்து கொண்ட விதம் நமது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட அவமானம் என  பிஅவரை டேக் செய்தார். 

இதைப்பார்த்து கடுப்பான திமுக-வின் அதிரடி ஹீரோ பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், உங்கள் பொய்களுடன் என்னை ட்விட்டரில் டேக் செய்வதை நிறுத்துங்கள். ஏதாவது பயனுள்ள பணிகளை செய்யுங்கள். அதற்கு பதிலாக ஏதேனும் பயனளிக்கக் கூடிய பணிகளை பாருங்கள் எனக்கூறி, பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசனை ட்விட்டரில் பிளாக் செய்தார் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்…

இப்படி மத்திய அரசையும், பாஜகவையும் நேரடியாக தாக்கும் பி.டி.ஆரின் செயலைக்கண்டு முதல்வர் முக ஸ்டாலின் குஷியாகிவுள்ளார். ஏனெனில் குறிப்பிட்ட வார்த்தைகளால் எதிர்கட்சியினரை திட்ட சிலர் யோசிக்கும் நேரத்தில் பி.டி.ஆர் சகஜமாக திட்டிவிட்டு மற்ற வேலையை பார்க்க செல்வது அவரது தனிச்சிறப்பாகவே பார்க்கப்படுகிறது…