அசரவைக்கும் படைப்பு..! வெளியானது பார்த்திபனின் இரவின் நிழல் படத்தின் ட்ரைலர் மற்றும் படம் வெளியீட்டு தேதி..!

பார்த்திபன் இயக்கி நடித்துள்ள உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமான இரவின் நிழல் படத்தின் ட்ரைலரும் படமும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதை அடுத்து மே 22 ஆம் தேதி மாலை சமூக வலைத்தளத்தில் வெளியானது படத்தின் ட்ரைலர். அசர வைக்கும் படைப்பாக உருவாகி உள்ள இந்த படம் குறித்து பார்க்கலாம்..

அசரவைக்கும் படைப்பு..! வெளியானது பார்த்திபனின் இரவின் நிழல் படத்தின் ட்ரைலர் மற்றும் படம் வெளியீட்டு தேதி..!

வித்தியாசமான முயற்சிகளை சினிமாவில் பரிசோதனை செய்து பார்ப்பது தான் உண்மையான சினிமா கலைஞனுக்கான அடையாளம். அதில், நடிகர் பார்த்திபன் வித்தகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஒத்த செருப்பு படத்தில் ஒரே ஒரு நடிகராக நடித்து ஒட்டுமொத்த படத்தையும் புரிய வைத்து பிரம்மிக்க வைத்தார். ஆஸ்கர் போட்டி வரை அந்த படத்தை அனுப்பி வைத்து பலரது பாராட்டுக்களை அள்ளினார் பார்த்திபன். ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு ஆஸ்கர் கிடைக்காத நிலையில், அந்த விருதை எப்படியாவது தட்டிப் பறித்து விட வேண்டும் என்கிற முயற்சியில் தான்  95 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த உலக சாதனை படத்தை எடுத்து அசதி இருக்கிறார். 

இரவின் நிழல் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் அதன் இசை தரம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காகவும் இந்த படத்தில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானை இசையமைக்க வைத்துள்ளார். மேலும், ஆஸ்கர் வென்ற மூவர் இந்த படத்தில் பணியாற்றி உள்ளனர். உலக இயக்குநர்களையே வியப்பில் ஆழ்த்தி உள்ள இந்த படம் கடந்த சில மாதங்களாக பல சர்தேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளை குவித்து வருகின்றது.

அந்த வகையில் தற்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரை இடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்காக தனது மகளுடன் வேஷ்டி சட்டையில் கூலிங் கிளாஸுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு செல்லும் விடியோவை சமீபத்தில் தன்னுடைய ட்விட்டெர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

இந்த நிலையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மே 22 ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை டிரைலரும் படமும் விழாவில் வெளியாக உள்ளதாக பதிவிட்டு இருந்தார், மேலும் தான் ரெட் கார்ப்பெட்டில் நடக்க போவதாக getting ready for red carpet என தலைப்பு இட்டு வீடியோ ஒன்றை பதிவிட அது வைரல் ஆனது. இயக்குனரும் நடிகருமான மாதவன் இரவின் நிழல் படத்தின் ட்ரைலரையும் படத்தையும் வெளியிட்ட நிலையில் அது பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. அதே நேரம் கலைப்புலி s தாணுவின் v creations வழங்கும் இந்த படத்தின் ட்ரைலர் யூ டியூபிலும் வெளியிடப்பட்டது. 

ட்ரைலரின் ஆரம்பமே மதன் கார்க்கியின் வரிகளில் ரஹ்மான் இசையில் பாடலின் வரியுடன் தொடர்கிறது, பெண் சாமியாராக வரலட்சுமி நடித்துள்ளார். குறும்படங்களில் நடித்து பவி டீச்சராக புகழ் பெற்ற brigida saga பார்த்திபனுக்கு ஒரு ஜோடியாக நடித்துள்ளார். சின்ன திரையில் நடித்து புகழ் பெற்ற பிரியங்கா ருது வும் ஒரு ஜோடியாக நடித்துள்ளார். ரோபோ சங்கர் சாமியார் வேடத்தில் நடித்துள்ளார். தற்போது நடக்கும் மூட நம்பிக்கைகளில் ஒன்றான போலி சாமியார்களை நம்பி முட்டாள் தானத்தில் உழன்று கிடப்பவர்களை குறித்து சொல்லப்பட்டு உள்ளது.

மேலும் படத்தில் அதிக ஆபாச வசனங்களும் ஆபாச கட்சிகளும் இடபெற்று உள்ளது. அந்த காட்சிகளுக்கு கட்இருக்காது வெறும் குரல் மட்டுமே mute செய்யப்படும் எனக் கூறி இருக்கிறார் பார்த்திபன். டீஸரிலேயே தெரிந்து இது குழந்தை முதல் நிகழ் காலம் வரை உள்ள பார்த்திபனின் கதை என்று. ட்ரைலரில் இறுதியில் வரும் காட்சி கண் கலங்க வைக்கும் வகையில் உள்ளது. படத்தின் இறுதியில் படம் வெளியீட்டு தேதி குறிப்பிடப்பட்டு உள்ளது. அதாவது ஜூன் 24 ஆம் தேதி இந்த படம் திரை அரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

ட்ரைலரை பார்த்த பலரும்  பார்த்திபனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ட்ரைலர் வெளியீட்டிற்குப் பின்பு முன் எப்போதும் இல்லாத அனுபவத்தை தர இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி உள்ளது எனபதே உண்மை..