சதம் அடித்த பெட்ரொல் விலை... கச்சா எண்ணெய் விலை குறைந்தும் உயர்வு ஏன்.. குமுறலுடன் கேள்வி கேட்கும் பொதுமக்கள்...

சென்னையில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யும் பெட்ரொல் இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை பாதியாக குறைந்தும் பெட்ரோல் விலை உயர்வு.. என்ன காரணம் என்பதை பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

சதம் அடித்த பெட்ரொல் விலை... கச்சா எண்ணெய் விலை குறைந்தும் உயர்வு ஏன்.. குமுறலுடன் கேள்வி கேட்கும் பொதுமக்கள்...
கொரோனா நெருக்கடிக்கு பின்னர் இந்தியாவின் பொருளாதாரம் மீட்சி பாதைக்கு திரும்பி வருவதால் பெட்ரோல், டீசல் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
 
இந்தியாவில் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் இந்தியா ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 110 டாலருக்கு வாங்கும் போது கூட இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 76 ரூபாய் மட்டுமே.
 
ஆனால் இன்று நிலைமை தலைகீழாக உள்ளது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயரும் காரணத்தால் சாமானிய மக்கள் தினசரி வாழ்க்கை முறை பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.
 
இந்நிலையில் பெட்ரோல், டீசல் உயர்வுக்குக் காரணம் என்ன..? 110 டாலருக்குக் கச்சா எண்ணெய் வாங்கும் போது எப்படி இந்தியாவில் பெட்ரோல் விலை குறைவாக இருந்தது.
 
இந்தியாவில் இன்று பெட்ரோல் விலை 33 பைசா வரையில் உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் 100.18  ரூபாயாக்குவிற்பனை செய்யப்படுகிறது.
 
சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் முதல் முறையாக ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயைத் தாண்டிய நிலையில் அடுத்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. இப்படி அடுத்தடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டிய நிலையில் இன்று சென்னையில் 100 ரூபாயை தாண்டியதால் மக்களுக்கு இந்தச் சுமை பழகிவிடும் நிலை தற்போது உருவாகியுள்ளது.
 
கச்சா எண்ணெய் விலை, டாலர் மதிப்பு ஆகியவற்றைச் சேர்ந்து 2013ஆம் ஆண்டில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை குறைந்தபட்சம் 5,380.42 ரூபாயும், அதிகப்படியாக 6,749.25 ரூபாயாகவும் இருந்தது. இதன் மூலம் பெட்ரோல் விலை சராசரியாக ஒரு லிட்டர் 76 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய நிலை என்ன..?
 
2013ஆம் ஆண்டை தற்போது ஒப்பிடுகையில் டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது, கச்சா எண்ணெய் குறைந்துள்ள போதிலும் இந்திய அரசு வாங்கும் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்குச் சுமார் 2000 ரூபாய்க்கு மேலாகக் குறைந்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையிலும் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கியக் காரணம் மத்திய அரசு விதித்து வரும் கலால் வரி தான்.
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றான சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின் உற்பத்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரி சக்தியை நோக்கி உலகம் நகரத் தொடங்கிவிட்ட நிலையில், அதுபோன்று பேட்டரியால் இயங்கக்கூடிய வாகனங்களைப் பயன்படுத்துவதை நோக்கி நாம் நகர வேண்டும்.