சென்னை வந்தும் ஓபிஎஸ், இபிஎஸ் ஐ சந்திக்காத பிரதமர்...! பின்னணி என்ன?

2 நாள் பயணமாக சென்னை வந்த பிரதமர் மோடி, அதிமுகவின் இரு தலைமைகளையும் தனியாக சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

சென்னை வந்தும் ஓபிஎஸ், இபிஎஸ் ஐ சந்திக்காத பிரதமர்...! பின்னணி என்ன?

அதிமுக ஒற்றைத் தலைமை:

அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் எழுந்தது முதல், கட்சியில் பல குழப்பங்கள், மாற்றங்கள் நடந்து வருவதை காண முடிகிறது. இபிஎஸ்தரப்பு ஒரு புறம், ஓபிஎஸ் தரப்பு ஒரு புறம் என மாறி மாறி எதிர் தலைமையின் ஆதரவாளர்களை நீக்கி வருகின்றனர். ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரில் டெல்லி மேலிடத்தின் ஆதரவு யாருக்கு இருக்க போகின்றதோ என்ற விவாதமும் எழாமல் இல்லை.

ஓபிஎஸ் டெல்லி பயணம்:

திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய. ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் பாஜக மேலிடம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் ஓபிஎஸ் மட்டுமே டெல்லி சென்று அந்த நிகழ்வில் கலந்து கொண்டார். மத்திய மைச்சர் அமிதாஷாவை சந்தித்து பேசிய அவர் பிரதமர் சந்திக்காமலே திரும்பி வந்ததாகக் கூறப்பட்டது.

அண்ணாமலை கருத்து:

அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையிடம் கேட்கப்பட்டபோது, அது அவர்களின் உட்கட்சி விவகாரம் அதில் நாங்கள் தலையிட மாட்டோம் எனக் கூறி இருந்தார். பாஜக இரு அதிமுகவை பிரிய விடாது என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், அவருடைய அந்த பதில் பாஜக அதிமுகவை தன்னுடைய பகடைக்காயாக பயன்படுத்த நினைக்கிறதா என்ற கேள்வியை அரசியல் வட்டாரத்தில் எழுப்பி இருந்தது.

இபிஎஸ் டெல்லி பயணம்:

திரௌபதி முர்முவின் குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவிற்கு சென்ற இபிஎஸ் அங்கு பிரதமர் மோடியை சந்தித்து அதிமுக உட்கட்சி விவகாரங்கள் குறித்து விவாதிப்பார் எனக் குறைபட்ட நிலையில், அண்ணாமலையுடன் சென்றும் கூட பிரதமர் இபிஎஸ்ஐ தனிமையில் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை எங்க கூறப்பட்டது.  இபிஎஸ் சென்னை வந்த பிறகும் அது குறித்தான முரண்பாடுகள் தென்பட்டது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து கூறுகையில், பிரதமரை சந்திக்க வேண்டும் என்ற திட்டமே இல்லை. பிரதமரை தனிமையில் சந்திக்க வேண்டும் எனக் கூறி இருந்தால் தானே அவர் நேரம் ஒதுக்கி இருப்பார், எங்கள் தரப்பில் இருந்து சந்திக்க வேண்டும் என கேட்கவில்லை எனக் கூறி இருந்தார்.

எஸ்.பி.வேலுமணி கூறுகையில், இபிஎஸ், பிரதமரை சந்திக்கவில்லை என யார் கூறியது. ராம் நாத் கோவிந்தின் பிரிவு உபசாரவிழாவில் மோடியிடம் அதிக நேரம் தனிமையில் பேசியதே இபிஎஸ் தான். 10 நிமிடம் மோடியுடன் உரையாடினார் எனக் கூறி இருந்தார். இபிஎஸ் ஆதரவாளர்களான இருவரும் இவ்வாறு முரணான கருத்துக்களைக் கூறி இருந்தது பாஜக உடனான இபிஎஸ்இன் நட்புறவில் சந்தேகத்தை எழுப்பி இருந்தது.

மூன்றாம் நபர் தலையிடுவதை விரும்பவில்லை:

ஜூலை 27 ஆம் தேதி, அதிமுக இடைகாலப் பொதுச்செயலாளர் தலைமையில் சென்னையில் ஆளும் திமுக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பேசிய இபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எங்கள் உட்கட்சி பிரச்சைகளில் மூன்றாம் நபர் தலையிடுவதை நங்கள் விரும்பவில்லை, இது பாஜகவிற்கு தெரியும் அவர்கள் எங்கள் உட்கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டார்கள் எனக் கூறி இருந்தது, இபிஎஸ் தரப்பு பாஜகவை நேரடியாகவே எதிர்ப்பதாக பார்க்கப்பட்டது. 

ஜிஎஸ்டி எதிர்ப்பு:

சமீபத்தில் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு 5% வரி விதித்து மத்திய அரசு. அதற்கு இபிஎஸ் எதிர்ப்பை பதிவு செய்து இருந்ததும் பாஜக அரசிற்கு அதிருப்தி அளித்ததாகவே கூறப்பட்டது. 

சென்னை ஆளுநர் மாளிகையில் சந்திப்பு:

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்காக சென்னை வந்த பிரதமர் மோடி, ஜூலை 28 அன்று இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தாங்கினார். அன்று ஓபிஎஸ் மோடியை சந்திக்க இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது ஆனால், அன்று பாஜக நிர்வாகிகளே மோடியை சந்தித்தனர். ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் மோடியை தனியாக சந்திக்கவில்லை. இதனால் மோடி ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரையும் தவிர்க்கிறாரோ என்ற சந்தேகமும் அரசியல் வட்டாரத்தில் வட்டமடித்தது.

வரவேற்க இபிஎஸ், வழியனுப்ப ஓபிஎஸ்:

ஜூலை 28 அன்று சென்னை வந்த மோடியை வரவேற்க இபிஎஸ் சென்னை விமான நிலையம் சென்றிருந்தார். ஆனால் அவருக்கு மோடியை தனியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஜூலை 29 அன்று சென்னையில் இருந்தது டெல்லி சென்ற மோடியை வழியனுப்ப ஓபிஎஸ் சென்று இருந்தார். அவர் மோடி தன்னிடம் உடல் நலம் குறித்து விசாரித்ததாக தெரிவித்தார். அதிமுக கட்சி பிரச்சனைக்கு குறித்து பேசப்பட்டதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமலே சென்று விட்டார்.

அதிமுகவின் உட்கட்சி பிரச்சனைகள் குறித்து உய்ரநீதிமன்றம் விசாரித்து 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறி உள்ள உள்ளது. இப்படி அதிமுகவில் பல குழப்பங்கள் நிகழ்ந்துவரும் நிலையில் பிரதமர் மோடி, இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரையும் சந்திக்காமல் தவிர்த்து வருவது, மற்ற மாநிலங்களில் பாஜக உடன் கூட்டணி அமைத்து காணாமல் போன கட்சிகளின் பட்டியலில் அதிமுகவையும் சேர்க்கும் அரசியல் நகர்வாக இருக்குமோ என்பதே அரசியல் விமர்சகர்களின் கேள்வியாக உள்ளது