அதிமுகக்கு எந்த பின்னடைவும் இல்லையாம்..! எப்பவும் போல இருக்காங்களாம்..!

அதிமுகக்கு எந்த பின்னடைவும் இல்லையாம்..! எப்பவும் போல இருக்காங்களாம்..!

அதிமுக உட்கட்சி பிரச்சனைகள் பூதாகரமாக  வெடித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் என பலரும் தங்களின் கட்சி குறித்தும், எதிரணியினர் குறித்தும் பல தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

அதிமுக பிளவு:

ஜூன் 23 இல் நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர் கட்சியில் ஒற்றை தலைமை கோஷம் வெடித்த பின்னர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் ஜூலை 11 இல் அதிமுக பொதுகுழுக் கூட்டம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. கட்சியின் இடைகாலப் பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். கட்சி இரண்டாக பிளவு பட்டது. கட்சியில் இருந்து பல அதிரடி நீக்குங்கள் நிகழ்ந்தன.

மேலும் படிக்க: வேடந்தாங்கல் பறவை போல் தாவியுள்ளார்..! அதிமுக சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்..!

நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்:

அதிமுக பொதுக்கு வழக்கில் ஆகஸ்ட் 17 அன்று உயர் நீதிமன்றமே அளித்த தீர்ப்பானது ஓபிஎஸ்க்கு சாதகமாக பார்க்கப்பட்டது. ஆகஸ்ட் 17 இல், நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும், அன்பு சகோதரே அனைவரும் இணைந்து அதிமுகவை வலி நடத்துவோம் என ஈபிஎஸ்க்கு அழைப்பு விடுத்தார் ஓபிஎஸ். 

துரோகி:

அதிமுகவின் துரோகி ஓபிஎஸ் உடன் எப்படி இணைய முடியும். 1989 இல் அம்மாவுடன் இணைந்து போட்டியிட்டது நான் தானே. தர்மயுத்தம் யாருக்கே திறக்க நடத்தினரோ அவரையே மீண்டும் கட்சிக்குள் அழைக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்றுவது என்பது சாத்தியம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார் ஈபிஎஸ்.

அணி தாவல்கள்:

ஜூலை 11 இல் அதிமுக பொதுக்குழு நடைபெற்ற சமயத்தில், ஓபிஎஸ் க்கு ஆதரவாக இருந்த பலர் ஈபிஎஸ் அணிக்கு சென்றனர். ஆனால், அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது அடுத்து, ஈபிஎஸ் பக்கம் சென்றவர்கள் பலர் ஓபிஎஸ்ஸை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் தேனியில் இருக்கும் ஓபிஎஸ்ஸை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

ஈபிஎஸ்க்கு பின்னடைவு:

அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கின் தீர்ப்பானது ஈபிஎஸ் க்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. மேலும், கட்சியும், தொண்டர்களும், நிர்வாகிகளும் தனக்கு ஆதரவாகவே இருப்பதாகக் கூறி வரும் ஈபிஎஸ், இன்று உயர்நீதிமன்றத்தில் வரும் தன்னுடைய மேல் முறையீடு மனு மீதான விசாரணையை எதிர்பார்ப்போடு பார்த்துக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க: ஈபிஎஸ்க்கு இருக்கும் இறுதி நம்பிக்கை..! சொந்த ஊர் கோவிலுக்கும் போயிட்டு வந்தாச்சு..! இன்று இறுதி தீர்ப்பு..!

பின்னடைவு போன்ற ஒரு பிம்பம்:

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள கீழத்தூவல் கிராமத்தில் உறவினர் இல்ல விழாவில் கலந்துகொள்ள சென்றிருந்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அங்கு செய்தியாளர்களை சந்தித்த போது, ''அதிமுக ஒரு பின்னடைவை சந்தித்திருப்பதாக ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு பின்னடைவும் அதிமுகவிற்கு ஏற்படவில்லை. கட்சியில் யாராக இருந்தாலும் தலைமைக்கு ஒத்துழைப்பு தராதவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுவது தான் 50 ஆண்டுகால அதிமுக வரலாறு எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று, பரிசீலனை செய்து கட்சியினுடைய சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தராமல், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த காரணத்தால் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளே தவிர வேறு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை என கூறியுள்ளார்.