தமிழக ஆளுநராகிறார் ரவிசங்கர் பிரசாத்.? அவரது முதல் நோக்கமே தமிழ்நாட்டை பிரிப்பதா?

தமிழக ஆளுநராகிறார் ரவிசங்கர் பிரசாத்.? அவரது முதல் நோக்கமே தமிழ்நாட்டை பிரிப்பதா?

தமிழக ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ரவிசங்கர் பிரசாத் புதிய ஆளுனராக  நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. . 

டெல்லி சென்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் நோக்கமே தமிழக ஆளுனர் பதவியில் இருந்து பன்வாரிலால்  புரோகித் மாற்றப்படலாம் என்றும் அவருக்கு  பதிலாக தமிழகத்திற்கு புதிய ஆளுனராக ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. 

சமீபத்தில் தான் ரவிசங்கர் பிரசாத் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு காரணமே அவர் தமிழக ஆளுநராக நியமிக்கதான் என்று கூறப்பட்டது. இந்நிலையில் யார் இந்த ரவிசங்கர் பிரசாத் என்று இணையத்தில் அதிகமாக தேடப்படுகிறது. 

பாஜக மூத்த தலைவரும்  வழக்கறிஞரருமான ரவிசங்கர் பிரசாத் பீகாரில் பிறந்தவர்.  பல வருடமாக  அரசியலில் இருந்தாலும் பெரிதாக மக்கள் செல்வாக்கு இல்லாதவர். ஆனால் அரசியல் பற்றி அதிகம் அறிந்தவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பரான இவர்,  பாஜகவுக்கும், அதிமுகவுக்கு பிரச்சனை வரும் போதெல்லாம் இவரே இரு தரப்புக்கும் தூதுவராய் செயல்பட்டார். 

ஜெயலலிதாவின் ஊழல் வழக்குகளில் அவருடைய வக்கீலாக வாதாடவும் செய்தார். இதனால் தற்போதைய பாஜகவில் தமிழக அரசியல் பற்றி அதிகம் அறிந்தவர் இவர் தான் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே தமிழக ஆளுநராக பொறுப்பேற்க அதிக வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

ஒருவேளை இவர் தமிழக ஆளுநராக்கப்பட்டால் இவரது முதல் வேலையே திமுகவிற்கு தொல்லை கொடுப்பதும், அதிமுகவை பலவீனப்படுத்துவதுமே என்று சொல்லப்படுகிறது. மேலும் பாஜக வலுவாக இருக்கும் கொங்கு மண்டலத்தை தனியே பிரித்து அங்கு பாஜகவை மேலும் வலுப்படுத்துவதுமே என்று கூறப்படுகிறது.