காதலுக்கு மரியாதை லலிதா காலமானார்...! தமிழ் மற்றும் கேரளா திரைத்துறையினர் இரங்கல்.

தமிழில் விஜய் நடிப்பில் உருவான காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் ஷாலினிக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். இவர் இரண்டு முறை சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளார் .

காதலுக்கு மரியாதை லலிதா காலமானார்...! தமிழ் மற்றும் கேரளா திரைத்துறையினர் இரங்கல்.

பிரபல மலையாள திரைப்பட நடிகையான லலிதா உடல்நல குறைவு காரணமாக நேற்று (22.02.2022) காலமானார். அவரது மறைவு மலையாள திரையுலகம் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகத்தினரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் உள்ளார்.மேலும் 500கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் லலிதா,கேரளாவின் ஆலப்புழாவில் ஒரு நாடக குழுவான கேரளா மக்கள் கலை குழுவில் அவரது பயணத்தை துவங்கினார். பின்னர் 1969 ம் ஆண்டு கே.எஸ். சேதுமாதவன் இயக்கத்தில் உருவான கூட்டுக்குடும்பம் படத்தின் மூலம் வெற்றிகண்டார்.

தமிழில் விஜய் நடிப்பில்  உருவான காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் ஷாலினிக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். இவர் இரண்டு முறை சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளார் .

இவரது மறைவுக்கு பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் துல்கர் சல்மான் அவரை பற்றி உருக்கமான பதிவை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், " திரையில் எனக்கான சிறந்த ஜோடி. நான் அதிக காதலை உணர்ந்த சிறந்த ஜோடி. அவர் ஒரு மேஜிக்,அவருடைய நுண்ணறிவை புன்னகையை போல் லேசாக அணிந்துள்ளார். அவர் எழுதப்பட்ட வார்த்தையை மீறியதால், ஒரு காட்சியில் உயிருடன் இருப்பதாக நான் உணர்ந்ததில்லை. இந்த புகைப்படங்கள் கடைசி நாளில் நாங்கள் ஒன்றாக எடுத்துக்கொண்டவை. என்னால் அதை விடமுடியவில்லை  மற்றும் நான் அவரிடம் கட்டியணைத்து முத்தம் கேட்டேன்.மேலும் அவர் அம்மாவும் மகனுமானக எப்போதும் சண்டையிட்டு கொண்டிருப்பது போல் நாம் ஒரு படம் பண்ண வேண்டும் என்று கூறிக்கொண்டிருப்பார். எங்களுக்கு நேரம் இருக்கிறது என்று நினைத்தேன்.

 

நாம் எப்படி ஒவ்வொரு குறுஞ்செய்தியையும் ஒருவருக்கொருவர் தொடங்கினோம்....சக்கரே எவிடேயா ?? " என உருக்கமாக பதிவிட்டு அவரது இரங்கலை தெரிவித்துள்ளார்.அதுமட்டுமல்லாமல் அவரது ரசிகர்களும் லலிதாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் லலிதாவின் பெயர் மகேஸ்வரி என்பது குறிப்பிடத்தக்கது.