இபிஎஸ்க்கு எதிராக சசிகலா கையில் எடுத்துள்ள சட்ட ஆயுதம்..!

இபிஎஸ்க்கு எதிராக பல வழக்குகள் நடந்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு உரிமை கோரி சட்ட ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் சசிகலா.

இபிஎஸ்க்கு எதிராக சசிகலா கையில் எடுத்துள்ள சட்ட ஆயுதம்..!

அதிமுகவின் பொதுச்செயலாளர்:

அதிமுக பொதுச்செயலலராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் பொதுச்செயலாளராக வி.கே.சசிகலாவும், துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுத்துள்ளதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது.

சசிகலா சிறைக்கு சென்ற பின்பு:

சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலா சிறைக்கு சென்றதால், அதன் பிறகு அதிமுக உட்கட்சியில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. தர்ம யுத்தத்தால் பிரிந்து இருந்த ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களோடு இபிஎஸ் உடன் சேர்ந்தார். அதனை அடுத்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் உருவாக்கப்பட்டதுடன், சசிகலாவையே அதிமுகவில் இருந்து நீக்கினர். 

சசிகலா வழக்கு:

தன்னை பொதுச்செயலாளராக அறிவித்து 2016 டிசம்பர் 29ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கட்சி உறுப்பினர்கள் என்ற முறையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரையும் கட்டுப்படுத்தும் எனவும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் எனவும் அறிவிக்க வேண்டுமென சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை நிராகரிக்க கோரி இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விசாரித்த நீதிபதி சசிகலாவின் வாழ்கை தழுப்பை செய்து உத்தரவிட்டார்.

சட்ட ஆயுதம்:

சசிகலாவை எப்படி கட்சியில் இருந்து நீக்கினாரோ அதே சூத்திரத்தை ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் இருந்து நீக்குவதற்கும் இபிஎஸ் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. தற்போது, இந்த விவகாரத்தைத் தான் சசிகலா தனது சட்ட ஆதாரமாக கையில் எடுத்துள்ளார். அதாவது, அதிமுகவின் பொதுச்செயலாளராக தன்னை நீக்கிய விதமும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வான விதமும் அடிப்படையில் அதிமுக சட்டவிதிகளுக்கு முரண்பாடாக உள்ளதாக சசிகலா தற்போது காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளார்.

ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் விசாரணை:

சசிகாலாவின் வழக்கு நிராகரிக்கப்பட்டதை குறிப்பிட்டு,  ஆரம்ப நிலையிலேயே வழக்கை நிராகரிக்க முடியாது என்பதால், தனது வழக்கை நிராகரித்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்; உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சசிகலாவின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி மஞ்சுளா முன் ஆகஸ்ட் இரண்டாவது வாரம் விசாரணைக்கு வர உள்ளது.