நோட்டா.. ஏட்டா.. என்ன ஒரு ரைமிங்..! பாஜகவிற்கு பதிலடி கொடுத்த செந்தில்பாலாஜி...!

நோட்டா.. ஏட்டா.. என்ன ஒரு ரைமிங்..! பாஜகவிற்கு பதிலடி கொடுத்த செந்தில்பாலாஜி...!

கரூரில் தற்போதைய மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சித்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கோவையில் திமுக தரப்பில் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

மேற்கு தமிழ்நாடு:

தமிழ்நாட்டின் மேற்கு மண்டலமான கோவை அதிமுகவின் பலமாகவே பார்க்கப்பட்டது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கோவையில் வெற்றிபெற முடியாமல் திமுக திணறியது. அதனால் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வலுவான ஒருவரை நிறுத்த நினைத்த திமுக, செந்தில் பாலாஜியை மேற்கு மண்டலா பொறுப்பாளராக நியமித்தது.

சாதித்த செந்தில் பாலாஜி:

எஸ்.பி.வேலுமணியின் கோட்டையாக பார்க்கப்பட கோவையில் உள்ளாட்சி தேர்தலில் திமுக அபார வெற்றியை பதிவு செய்தது அதிமுகவிற்கு சற்று கலக்கத்தை கொடுத்திருந்தது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாற்று கட்சியினர் 50,000 பேரை திமுகவில் இணையச்செய்து அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றார். செந்தில் பாலாஜியின் செயல்பாடுகள் அதிமுக, பாஜகவினரை கலக்கமடைய செய்துள்ளதாக கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

செந்தில் பாலாஜி:

முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய திமுக அமைச்சருமான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்த குறுகிய காலத்திலேயே அதிகம் கவனிக்கப்படும் ஒருவராக மாறியுள்ளார். இவர் மீது பல குற்றசாட்டுகளை பாஜக வைத்து வருகிறது. முக்கியமாக தற்போது மின் துறையில் நிலக்கரி ஊழல் செய்ததாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். பதவியில் இருந்து நீக்கவும் ஆளுநரிடம் பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் படிக்க: ஓ.. இதுக்கு தான் சோதனையா? இதுவரை யாரும் சொல்லாத காரணம்..! எப்படி யோசிக்குறாரு பாருங்க..! 

ரூ.50,000 கோடிக்கு அதிபர்:

செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூரில், அவரச கேலி செய்யும் விதமாக பாஜகவினர் போஸ்டர் ஒட்டி இருந்தனர். அதில், ரூ.50,000 கோடிக்கு அதிபர் செந்தில் பாலாஜி என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த போஸ்டர்கள் கரூர் முழுக்க காணப்பட்டது. சாலை சந்திப்புகள், தடுப்புகள், முக்கிய இடங்கள் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

நோட்டாவுடன் போட்டி:

சேடன்ஹில் பாலாஜியின் சொந்த மாவட்டத்தில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டது திமுகவிற்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதற்குபதிலடி கொடுக்கும் விதமாக கரூரில் நடைபெற்ற திராவிட பயிற்சி பாசறை கூட்டத்தில் பேசிய செந்தில் பாலாஜி , நோட்டாவுடன் போட்டி போடக்கூடிய கட்சியினர் கூறும் தவறான கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என பேசியிருந்தார்.

நோட்டா.. எட்டா..:

இந்நிலையில், கோவை கிழக்கு மாவட்ட திமுகவினர் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பாஜகவை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்களில், "நோட்டா கிட்ட வச்சுக்கோ.... எங்க ஏட்டா கிட்ட வேண்டா" என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் கோவை ரயில் நிலையம், கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.