இலங்கை கையேந்தும் நிலை..! இலங்கைவாசிகளால் தனுஷ் கோடியில் பரபரப்பு..!

இலங்கையில் நிலவும் நெருக்கடி நிலமை காரணமாக இலங்கைவாசிகள் சிலர் தனுஷ் கோடிக்கு படகு மூலம் தஞ்சம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை கையேந்தும் நிலை..! இலங்கைவாசிகளால் தனுஷ் கோடியில் பரபரப்பு..!

வரலாற்றில் இல்லாத அளவிற்கு இலங்கையில் மிக மோசமான பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதுடன் கடந்த 75 வருடங்களில் இல்லாத நிலைக்கு பொருளாதாரம் நலிவடைந்துள்ளது. இதன் காரணமாக ஒரே வாரத்தில் இரண்டு முறை சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கையேந்தும் நிலைக்கு சென்றுவிட்டது. இந்த நிலையில் இலங்கைவாசிகள்  சிலர் தனுஷ் கோடி பகுதிக்கு படகு மூலம் வந்து தஞ்சம் அடைந்துள்ளனர். 

இந்தியா இலங்கை இடையே 13 மணல் திட்டு உள்ள பகுதியில் கடலோர காவல்படையினர் ரோந்து பணிகளை செய்து வந்தனர். அப்போது தனுஷ் கோடி மூன்றாம் மணல் திட்டு பகுதியில் 1 ஆண், 2 பெண்கள், ஒரு கை குழந்தை, 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் அங்கு இருந்தது தெரிய வந்துள்ளது. அவர்களை உடனே மீட்ட கடலோர காவல்படையினர் கியூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் கியூ பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் , நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தமிழ்நாட்டிற்கு வந்ததாக தெரிவித்த அவர்கள், இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை. உணவு கிடைக்கவில்லை, குழந்தைகளுக்கு பால் கொடுக்க கூட முடியவில்லை. விலைவாசி அதிகமாகிவிட்டது. என்று புலம்பித் தீர்த்தனர். வேலையும் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு வந்தால் தப்பித்துக் கொள்ளலாம். இங்கே ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்று நம்பி வந்ததாக கூறியுள்ளனர். அதேவேளை இவ்வாறு  தஞ்சம் கோரி வந்தவர்கள் இலங்கையில் இருக்கும் தமிழர்களா அல்லது சிங்களர்களா என்ற விவரம் வெளிவரவில்லை.