10 வருட காத்திருப்பு.. ஸ்டாலினை நெருக்கும் நிர்வாகிகள்..!

உள்ளாட்சி தேர்தலுக்காக காத்திருக்கும் திமுக நிர்வாகிகள்..!

10 வருட காத்திருப்பு.. ஸ்டாலினை நெருக்கும் நிர்வாகிகள்..!

தேர்தலில் எதிர்பார்த்தபடி வெற்றி, அரியாசனம், அதிகாரம், நாடாளுமன்றத்தில் 24-எம்.பி-க்கள் என 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்து என 4 திசைகளில் இருந்தும் சந்தோசம் கிடைத்தாலும், 12 திசைகளில் இருந்து பிரச்னைகள், சண்டை, சச்சரவுகளால் விழிபிதுங்கி நிற்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். 

கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்று, வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றனர். இருப்பினும் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற 9 மாவட்டங்களில் தொகுதி வரையறை காரணமாக உள்ளாட்சி தேர்தல் தள்ளிப் போனது. அதிர்ஷ்டவசமாக தொகுதி வரையறை மற்றும் கொரோனா போன்ற காரணங்களை சுட்டிக் காட்டி இத்தனை காலம் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து விட்டது அதிமுக. தற்போது செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சியை பிடித்தாலும், அதிமுக ஆங்காங்கே விட்டு வைத்து சென்ற அனைத்தையும் சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது திமுக..

கோட்டையைப் பிடித்ததில் இருந்து நிம்மதி பெருமூச்சு விடக் கூட நேரமில்லாத வகையில், கொரோனா தொற்று பரவல், உள்ளாட்சி தேர்தல், உட்கட்சி பூசல், குடும்பத்தில் வாரிசி தகராறு என அடுத்தடுத்து விழும் அடியால் எப்படி மீண்டெழுவது என மூச்சு திணறிய நிலையில் இருக்கிறார் ஸ்டாலின்.  உள்ளாட்சி தேர்தல் என்பது சிறிய சட்டமன்ற தேர்தலாக பார்க்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தலிலேயே வெற்றி பெற்றப் பிறகு உள்ளாட்சி தேர்தலில் தோல்வியை தழுவினால் எப்படி மக்கள் மத்தியிலும், எதிர்கட்சியினர் முகத்திலும் முழிப்பது என்ன தயங்குகிறது திமுக. மேலும் ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் முடிந்தளவு பணத்தை விரயம் செய்துள்ள நிலையில், மீண்டும் உள்ளாட்சி தேர்தலுக்கு நிதியில்லாமல் தவிக்கிறது. 

10 ஆண்டு காலத்தில் காலரை தூக்கிவிட்டு மொத்ததையும் அள்ளி சுருட்டி வைத்துள்ள அதிமுக, உள்ளாட்சி தேர்தலுக்காக கால் மேல் கால் போட்டு காத்திருக்கிறது. நடைபெறவுள்ள 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் வடதமிழகத்தில் உள்ளது. அந்த 7 மாவட்டங்களில் 6 இடங்கலில் பாமக வலுவாக இருப்பதால், அதிமுக-பாமக கூட்டணி திமுகவிற்கு கடும் போட்டியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

இது ஒருபுறம் இருக்க...கடந்த அதிமுக ஆட்சியின் போது எம்.எல்.ஏ-க்கள் எவ்வளவு சுதந்திரமாக இருந்தார்களோ அதேபோல இருக்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏக்கள் எதிர்பார்க்க, அதற்கு திமுக அமைச்சர்கள் முட்டுக்கட்டையாக உள்ளனர். குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் அமைச்சர் பொன்முடிக்கும், சில எம்.எல்.ஏ-க்கள் இடையேயும், வேலூர், ராணிப்பேட்டையில் அமைச்சர்கள் துரைமுருகனுக்கும், ரானிப்பேட்டை காந்திக்கும் இடையேயும், தென்காசி, திருநெல்வேலியிலும் ஆவுடையப்பன், அப்பாவு, அப்துல் வஹாப், சிவபத்மநாபன், துரை என ஆளாளுக்கு தனக்கென ஒரு கும்பலை வைத்துக் கொண்டு உள்ளனர். 

இப்படி இருக்க உள்ளாட்சி தேர்தலில் சீட் கிடைக்கும் பட்சத்தில் எதிரே உள்ள கோஷ்டி நிச்சயம் கட்சிக்கு எதிராக திரும்புவர். இருப்பினும், அமைச்சர்கள், அதிகாரிகள் மூலம் வெற்றி பெற்று விடலாம் என முதலமைச்சர் ஸ்டாலின் நினைக்கிறார். இருப்பினும் உட்கட்சி பூசலை சமாளித்து விட்டு தான் தேர்தலை சந்திக்க வேண்டும் என அவர் நினைத்தாலும் அதற்கான நேரம் இல்லை என்பது தான் இப்போதைய நிலைமை. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு, இந்த மாவட்டங்களில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்கிறது அறிவாலயம்.