பிரதமருக்கு முதலமைச்சர் வழங்கிய டைமிங் கிப்ட்..!

பிரதமருக்கு முதலமைச்சர் வழங்கிய டைமிங் கிப்ட்..!

திண்டுக்கல் வந்த பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை பரிசாக வழங்கி வரவேற்றுள்ளார்.

திண்டுக்கல் வந்தடைந்த மோடி:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திற்கு வருகை புரிந்தார். அதன்படி, பெங்களூரில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம்  பிரதமர் மோடி வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் வந்த மோடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் சென்று வரவேற்றனர். 

புத்தகம் வழங்குவதை வழக்கமாக கொண்ட ஸ்டாலின்:

இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு வரும் வடமாநில தலைவர்களை வரவேற்கும் போது, தமிழ்நாட்டின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையிலும், திராவிட சித்தாந்தங்களை எடுத்துரைக்கும் வகையில் புத்தகங்களை பரிசாக வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதையும் படிக்க: எம். ஜி.ஆர்.வழியில் முதலமைச்சர் ஸ்டாலின்...குற்றம்சாட்டும் ஜெயக்குமார்!

முதலில் தொல்காப்பியம்:

அந்த வகையில், கடந்த ஜூலை மாதம் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ்  ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்த பிரதமர் மோடிக்கு “தொல்காப்பியம்” புத்தகத்தை பரிசாக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இதனால் இந்த முறை எந்த புத்தகத்தை ஸ்டாலின் வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்தது. 

இன்று பொன்னியின் செல்வன்:

இந்நிலையில், இன்று திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக திண்டுக்கல் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு, கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” நாவலின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு புத்தகத்தை வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். சோழ பேரரசின் எழுச்சியையும், ராஜராஜ சோழனின் நிர்வாகத்தையும், ஆதித்த கரிகாலன் கொலையையும் மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த புத்தகத்தை பிரதமருக்கு முதலமைச்சர் பரிசாக வழங்கியுள்ளார்.

இந்த பின்னணியில், திமுக ஆட்சிக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும் போதெல்லாம் தமிழின் சிறப்பை உணர்த்தும் வகையில் புத்தகம் வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோன்று கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்ற போது, தமிழின் பெருமையை உணர்த்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.