மாநிலத்திலேயே தமிழ் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவி...!குவியும் வாழ்த்துக்கள்...

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், மாநிலத்திலேயே பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழில் 100க்கு 100 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார் மாணவி துர்கா.

மாநிலத்திலேயே தமிழ் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவி...!குவியும் வாழ்த்துக்கள்...

பொதுவாக மொழி பாடங்களில் முழு மதிப்பெண் பெறுவது மிகவும் கடினமான ஒன்று தான். படிக்கும் காலங்களில் மொழி பாடங்களில் முழு மதிப்பெண் வழங்கமாட்டார்கள் என்றே கூறுவர். அதிலும் குறிப்பாக தமிழ் மொழியில், ஏதேனும் ஒரு தவறை சுட்டிக்காட்டி 99 மதிப்பெண் வரை கூட பெறுவர். அல்லது குறைந்தபட்சம் கையெழுத்திற்காகவோ அல்லது presentation காகவோ மதிப்பெண்கள் குறைக்கப்படும். ஆனால் தற்போது அதையெல்லாம் மீறி,  10 ம் வகுப்பு மனைவி தமிழ் பாடத்தில், மாநிலத்திலேயே ஒரே ஒரு மாணவியாக 100க்கு 100 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். 

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் திருச்செந்தூர் அருகே உள்ள காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில்  துர்கா என்ற மாணவி 500க்கு 448 மதிப்பெண் பெற்றுள்ளார். இதில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். மேலும், மாநிலத்தில் அறிவியலில் 3841 பேரும், கணிதத்தில் 2186 பேரும் 100க்கு 100 பெற்றுள்ள நிலையில், தமிழில் 100க்கு 100 எடுத்த ஒரே ஒரு மாணவி துர்காதான். மாணவியின்  தந்தை ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். மாணவியை பள்ளி ஆசிரியர்கள், குடும்பத்தினர் பாராட்டினர். பின்னர் மாணவிக்கு பள்ளி முதன்மை முதல்வர் செல்வ வைஷ்ணவி பரிசு கோப்பை வழங்கினார்.

இதுபற்றி பேசிய மாணவி துர்கா, "முதல் மதிப்பெண் பெறுவதற்கு ஆசிரியர்கள் குடும்பத்தினர் உடன் படித்த நண்பர்கள் அனைவரும் ஊக்கப்படுத்தியதாக தெரிவித்தார். மேலும் தமிழ்மொழி படிப்பதற்கு எளிமையாக இருப்பதாகவும்" தெரிவித்தார். ஆங்கில வழி கல்வியில் பயின்ற மாணவி தமிழ் பாடத்தில் முதல் இடம் பெற்றிருப்பது தனி சிறப்பை பெற்றுள்ளது.

மேலும் அதே போல் நாமக்கல் மாவட்டம் குப்பாண்டபாளையத்தில் உள்ள  ரிலையன்ஸ் மெட்ரிக் பள்ளியில் பயின்ற ஸ்ரீ ராம் என்ற 12 ம் வகுப்பு மாணவனும் தமிழில் 100 க்கு 100 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். இது குறித்து அவர் பேசும் போது, " நான் இந்த மதிப்பெண் பெற்றதற்கு காரணம் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் தான். தமிழ் மீது ஆர்வம் வந்ததற்கு காரணம், எனது தமிழ் ஆசிரியர் தான், என்னை ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பார். கால்நடை மருத்துவம் படிப்பதே எனது ஆசை " என தெரிவித்துள்ளார்.