TTF ஓட பவர் தெரியாம..! நியூஸ் சேனல்களை மிரட்டும் தொனியில் பேசிய TTF வாசன்..! 

TTF ஓட பவர் தெரியாம..! நியூஸ் சேனல்களை மிரட்டும் தொனியில் பேசிய TTF வாசன்..! 

ஜாமினில் வெளியே வந்துள்ள யூடியூபர் TTF வாசன், நியூஸ் சேனல்களை மிரட்டும் தொனியில் பேசி எச்சரித்துள்ள வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TTF வாசன்:

கோவையைச் சேர்ந்த TTF வாசன், Twin throttlers எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்வது, சாகசம் செய்வது, மற்றவர்களுக்கு உதவுவது போன்றவற்றை, வீடியோவாக பதிவேற்றம் செய்யும் TTF வாசனுக்கு தனியே பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவுடன், TTF வாசன் ஆபத்தான முறையில் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டி, சாகசம் செய்யும் வீடியோ வெளியாகி வைரலானது. 

வழக்குகள்:

பைக்கை அதிவேகத்தில் செலுத்தும் இந்த வீடியோவிற்கு பலரும் ஆட்சேபம் தெரிவித்ததுடன், சாலை விதிமுறைகளை மீறும் TTF வாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், மனித உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் வகையிலும் இருசக்கரவாகனத்தை ஓட்டி  வீடியோ வெளியிட்டதாக TTF வாசன் மீது போத்தனூர் மற்றும் சூலூர் போலீசார்  தலா 2 வழக்குகளை பதிவு செய்தனர். 

மேலும் படிக்க: அடிக்கடி இருப்பிடத்தை மாற்றும் மீராமிதுன்...திணறும் போலீசார்...நீதிபதி சொன்னது என்ன?

TTF வாசன் சரண்:

இதனை தொடர்ந்து அவரை போத்தனூர் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதனால் வேறுவழியின்றி, மதுக்கரை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்பாக  TTF வாசன் சரணடைந்தார். காலை 10.30 மணிக்கு சரணடைந்த அவர், மாலை 5.30 மணி வரை நீதிமன்ற கூண்டில் அமர வைக்கப்பட்டு, பின்னர், 2 பேர் உத்தரவாதம் அளித்தபிறகு,  ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

TTF ஓட பவர் தெரியாம..:

இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை அமைதி காத்து வந்த  TTF வாசன்,  தனது யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், TTF ஓட பவர் தெரியாமல் விளையாடிக்கொண்டு இருப்பதாக நியூஸ் சேனல்களை மிரட்டியுள்ள அவர், யாரை பார்த்தும் தனக்கு பயம் கிடையாது என்றும் நியூஸ் சேனல்கள் எல்லை மீறி போவதாகவும் சாடியுள்ளார். அதோடு நிறுத்தாமல் நியூஸ் சேனல்களை எச்சரித்துள்ள TTF வாசன், காவல் துறைக்கும் தனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

சர்ச்சையில் TTF :

சில தினங்களுக்கு முன்பு, யூடியூபர் TTF வாசன் அதிவேகமாக பைக்கில் செல்வது பற்றியும், அவரது ரசிகர்களும் அதைப் பின்பற்றுவது குறித்தும் வேதனை தெரிவித்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான ரவி, மற்றவர்களுக்கு தவறான வழியைக் காட்டும் வகையில் செயல்படக்கூடாது என்று  TTF வாசனுக்கு அறிவுரை கூறியிருந்தார். ஆனால் இந்த அறிவுரைகளை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத TTF வாசன், தன் தவறுகளை நியாயப்படுத்தியும் நியூஸ் சேனல்களை எச்சரிக்கும் வகையில் வீடியோ பதிவிட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.