உங்கள் மாணவர்களுக்கு மராத்தியைக் கற்றுக்கொடுங்கள்..! உபி அரசுக்கு பாஜக பிரமுகர் கடிதம்..!

மகாராஷ்டிரா பாஜக மாநில துணைத் தலைவர் கிருபாசங்கர் சிங் , உத்தரப் பிரதேச பள்ளிகளில் மாணவர்களுக்கு மராத்தி கற்றுக்கொடுக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதி உள்ளார்.

உங்கள் மாணவர்களுக்கு மராத்தியைக் கற்றுக்கொடுங்கள்..! உபி அரசுக்கு பாஜக பிரமுகர் கடிதம்..!

இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என வடமாநிலத்தவர் கூறி வரும் வேளையில் அவர்களை மராத்தி கற்றுக் கொள்ள கோரிக்கை வைத்துள்ளது தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு தவிர்த்து நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை மூலம் விருப்பப் பாடமாக பெரும்பாலும் இந்தி கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தி திணிப்புக்கு எதிராக போராடி இருமொழிக் கொள்கையை தமிழ்நாடு நிலைநாட்டியதால் நமது மாநில பாடத்திட்டத்தில் இன்னும் இந்தி சேர்க்கப்படவில்லை. பெரும்பாலும் தமிழும் ஆங்கிலமும் தான் கட்டாயப் பாடமாக உள்ளது. 

அதேநேரம் மத்திய அரசு அறிமுகப்படுத்தும் புதிய கல்விக் கொள்கையில் இதற்கு மாற்றாக மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டு இந்தியை திணிக்கும் முயற்சிகள் நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இந்தி திணிப்பு குறித்த பேச்சுக்கள் எழும்போதெல்லாம் நாமும் அதை எதிர்க்காமல் இருப்பது இல்லை. இந்தி கற்றால் வட மாநிலங்களில் வேலைக்கு செல்பவர்களுக்கு பயனளிக்கும் என்று வலதுசாரிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

மற்ற மாநிலத்தவர்களுக்கு இந்தி மாநிலத்தவர் கூறி வந்த கருத்துக்கள் தற்போதுஅவர்களுக்கே திரும்பி உள்ளது. முக்கியமாக பாஜக தலைவர்களிடம் ஒலிக்க துவங்கி உள்ளது. மகாராஷ்டிரா மாநில பாஜக துணைத் தலைவராக இருப்பவர். இவர் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில், உத்தரபிரதேச பள்ளிகளில் மாணவர்களுக்கு மராத்தி மொழியை விருப்பப் பாடமாக வைக்க கோரிக்கை விடுத்து உள்ளார்.

மராத்தியை மாணவர்கள் கற்றுக்கொண்டால் மகாராஷ்டிராவில் நல்ல வேலை கிடைக்கும் என்று கடிதத்தில் கூறியுள்ள கிருபாஷங்கர், உத்தரப் பிரதேசத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி முடித்த மாணவர்கள் பலரும் மகாராஷ்டிராவிற்கு வேலை தேடி வருவதாகவும், அவர்கள் மராத்தி மொழி புரியாமல் பல சிக்கல்களை சந்தித்து வருவதை தாம் 50 ஆண்டுகளாகக் கவனித்து வருகிறேன்." எங்க கூறி உள்ளார். 

இந்தி கற்றால் தான் இந்திய முழுவதும் மொழி பிரச்சனை இல்லாமல் செல்ல முடியும், வேலைக்காக வெளி மாநிலங்களுக்கு செல்ல முடியும் எனக் கூறி வந்த வலதுசாரிகளுக்கு இந்தி மட்டுமே இந்தியாவின் மொழி அல்ல என்பதை அழுத்தி கூறுவது போல உள்ளது இந்த கடிதம். எதுவாக இருந்தாலும் விருப்பத்தின் பெயரில் கற்றால் மட்டுமே இன்பம் தருமே தவிர, திணிப்பால் அமையாது...