அறிவாலயத்தில் இருந்து சுதீஷுக்கு பறந்த முக்கிய தகவல்... பயங்கர குஷியான தேமுதிக...

தமிழகத்தில் மீதமுள்ள மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரேமலதா, சுதீஷுயின் தேமுதிக கட்சி அண்ணா அறிவாலயத்திற்கு தூது அனுப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அறிவாலயத்தில் இருந்து சுதீஷுக்கு பறந்த முக்கிய தகவல்... பயங்கர குஷியான தேமுதிக...
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 28-ந் தேதிகளில் தேர்தல் நடந்தது.மேலும் தமிழகத்தில் விடுபட்ட நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக தேர்தல் ஆணையத்துக்கு  அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தனர்.அதில், செப்டம்பர் 15-ந் தேதிக்குள் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என அதிரடி உத்தரவிட்டனர்.
 
இதையடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கான மும்முரம் தமிழகத்தில் ஆரம்பமாகி உள்ளது. திமுக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.ஆனால், அதிமுக அமைதியாக இருந்து வருவதால் கடந்த ஒரு மாதமாகவே, மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி போனை போட்டு தெம்பூட்டி வருவதாகவும், சட்டமன்ற தேர்தலில் விட்டதை இதில் மொத்தமாக பிடித்துவிடலாம் என்று நம்பிக்கை தந்து வருவதாக கூறப்படுகிறது.
 
இன்றைய சூழலில் அதிமுகவுக்குள் இப்போதைக்கு இணக்கமான சூழல் காணப்படவில்லை என்றும் உட்கட்சி பூசலில் சிக்கி தவித்து வருவதால்  குறைந்தபட்சம் வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட முடியாத அளவுக்கு இக்கட்டான நிலைமையில் அதிமுக  திண்டாடி வருவதாக பல அரசியல் விமர்சர்கள் பல விவாதங்களில் கருத்து கூறி வருகின்றனர்.

 
இந்த நிலையில் தான் அதிமுக தலைமை கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளை உள்ளாட்சி தேர்தலுக்குத் தயாராகுமாறு அறிவுறுத்தியிருந்தது.உள்ளாசி தேர்தல் குறித்து அக்கட்சி எந்த முடிவில் உள்ளது என்பது தெளிவாக தெரியாமல் இருந்த சூழலில், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்திய அதிமுக பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
 
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகளோடு இணைந்துதான் உள்ளாட்சி தேர்தலையும் சந்திக்கிறோமா? அல்லது தனித்து போட்டியிடுகிறோமா? என்பது குறித்தும்  கூட்டத்தில் விவாதித்தாக வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் தேமுதிக உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகிறது.நடக்க போகும் உள்ளாட்சி தேர்தலில் 7 வட மாவட்டங்கள் அடங்கி உள்ளதால், இது தேமுதிகவுக்கு சாதகமாகவே உள்ளது.. பாமக அளவுக்கு இல்லையென்றாலும் ஓரளவு தேமுதிகவுக்கு இங்கு செல்வாக்கு உள்ளதால், இந்த தேர்தலை சந்திக்க தேமுதிக ஆர்வம் காட்டி வருகிறது.. அதனால், திமுகவுடன் கூட்டணி வைக்கவும் முயற்சி எடுத்து வருகிறது.
 
முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசுமாறு, சுதீஷிடம் தேமுதிக பொருளாளர் பிரேமலதா சொல்லி உள்ளாராம்.. அதனால், ஸ்டாலினை சந்திப்பதற்கான முயற்சியில் குதித்துள்ளார் சுதீஷ்... ஆனால், ஸ்டாலினிடமிருந்து சந்திப்புக்கான க்ரீன் சிக்னல் இன்னமும் கிடைக்கவில்லையாம்.. அதேசமயம், தேர்தல் தேதி அறிவிக்கட்டும், நல்ல செய்தி உங்களுக்கு கிடைக்கும் என்று உளவுத்துறையின் முக்கிய அதிகாரி ஒருவரிடமிருந்து சுதீஷூக்கு தகவல் கிடைத்துள்ளதாம்.