அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஆகிறாரா ஈபிஎஸ்...? அதுவும் போட்டியின்றி....?

அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஆகிறாரா ஈபிஎஸ்...? அதுவும் போட்டியின்றி....?

அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வரும் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுசெயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து தீர்மானத்தையும் நிறைவேற்றினார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சமீபத்தில் அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் மூலம், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் என்பது உறுதி செய்யப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு ஈபிஎஸ்சின் தான் என்ற ஆணவம் தான் காரணம்  என்றும், இனிமேலாவது ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஓபிஎஸ் குற்றம் சாட்டினார்.  அதேசமயம், கூட்டணி கட்சிகளும் அதிமுகவின் பிளவு தான் இந்த தோல்விக்கு காரணம் என்று கூறி வந்தனர். 

இதையும் படிக்க : விழிப்புணர்வுக் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த North Indians...!

இந்த கருத்துக்களை தொடர்ந்து, வரும் மார்ச் 9 ஆம் தேதி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தை தொடர்ந்து, வரும் மார்ச் 10 ஆம் தேதி அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அதற்கான அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டங்களுக்கு பிறகு, அதிமுக பொதுச் செயலாளருக்கான தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டவுடன் எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக சுற்றுபயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி தேர்தல் அறிவிப்பு வெளியானால் அதில் ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த பின்னணியில் ஒருவேளை ஈபிஎஸ் போட்டியின்றி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டால், ஓபிஎஸ் சின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்குமென்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்...