மூன்று பதவிக்கு முன்னூறு பேர் போட்டி,.. லிஸ்டின் முன்னணியில் இந்த மூன்று பேர்,.! 

மூன்று பதவிக்கு முன்னூறு பேர் போட்டி,.. லிஸ்டின் முன்னணியில் இந்த மூன்று பேர்,.! 

அதிமுகவைச் சேர்ந்த ராஜ்ய சபா எம்.பி. முகமது ஜான் காலமானதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து முதலில் ஒரு ராஜ்ய சபா எம்.பி. பதவி காலியானது. இதையடுத்து அதிமுக சார்பில் ராஜ்ய சபா எம்.பி.க்களாக இருந்த கே.பி.முனுசாமியும்  வைத்திலிங்கமும் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றனர். இதன் காரணமாக எந்த பதவியை அவர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவருமே ராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்தார்கள். இதன் காரணமாக மொத்தமாக மூன்று எம்.பி பதவிகள் காலியானது.

இவ்ர்களில் மறைந்த ராஜ்ய சபா எம்.பி முகமது ஜானின் பதவிக்காலம் ஜூலை 2025ல் முடிவடைகிறது. வைத்திலிங்கத்தின் பதவி காலம் ஜூன், 2022ம் ஆண்டிலும், கே.பி.முனுசாமியின் பதவிக் காலம் ஏப்ரல் 2026லும் முடிவடைகிறது. இதனால் காலியான மூன்று எம்.பி பதவிகளுக்கும் தனி தனியாக தான் தேர்தல் நடைபெறும்.

தற்போது தமிழக சட்டமன்றத்தில் திமுக பெரும்பான்மை பலம் பெற்றதால் மூன்று எம். பி பதவிகளும் திமுகவுக்கே கிடைக்கும் நிலை இருக்கிறது. அதேபோல இந்த மூன்று எம்.பி பதவிகளுக்கும் திமுகவில் கடும் போட்டி நிலவுகிறது. மேலும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு இடத்தை கேட்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த பதவியை யாருக்கு கொடுப்பது என்பதில் திமுக தலைமைக்கு கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

இந்த எம்.பி பதவியை  கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் சபாநாயகர் ஆர்.ஆவுடையப்பன், கார்த்திகேய சிவசேனாதிபதி ஆகியோருக்கு கொடுக்க வாய்ப்பிருப்பதாக அப்போதே பேசப்பட்டது. இவர்களை தவிர முன்னாள் எம்.எல்.ஏ எம்.ஆஸ்டின், தங்கத்தமிழ் செல்வன் ஆகியோரும் இந்த போட்டியில் இருக்கிறார்கள். 

இவர்களில் மூன்று பேருக்கு தான் திமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி பதவி ஒடுக்கப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், ஏன் கட்சியில் வேறு ஆட்களே இல்லையா? இவர்கள் ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தவர்கள், இவர்களுக்கு மீண்டும் ஏன் வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் முனங்கி வருகிறார்கள் என்று திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் எம்.பி. எம்.எல்.ஏக்களின் வாரிசுகள், மாற்று கட்சியில் இணைந்தவர்கள், கட்சியில் பல காலம் உழைத்தவர்கள் என்று கிட்டத்தட்ட இந்த மூன்று பதவியை முன்னூறுக்கும் அதிகமானவர்கள் கேட்பதாகவும், இதனால் யாருக்கு இந்த பதவியை கொடுப்பது என்பதை திமுக தலைமை கடைசி வரை ரகசியமாகவே வைத்திருக்கப்போகிறதாம்.