6 பாலில் 6 ‘சிக்சர்’ அடித்த 6 அடி ஜாம்பவானின் பிறந்தநாள் இன்று...

6 பாலில் 6 ‘சிக்சர்’ அடித்த 6 அடி ஜாம்பவானின் பிறந்தநாள் இன்று...

இந்தியாவில் கிரிக்கெட் பிடித்த அனைவருக்கு கேப்டன் கூல் - தோனியைப் பிடிக்காமல் இருக்கவே இருக்காது. அவரது சிறப்பை அறியாதவர் யாருமே இல்லை. அப்படிப்பட்ட தோனியை உலக கிரிக்கெட் ரசிகர்களுமே ரசிக்கும் நிலையில், அந்த தோனி ஒருவரைப் பார்த்து ரசித்து வியந்தவர் யார் என உங்களுக்கு தெரியுமா? அவர் தான் யுவராஜ் சிங்.

அற்புதமான ஆல் ரவுண்டரான யுவராஜ் சிங், பேட்டிங்கிற்கு பேர் போனவர். பல போட்டிகளில் பங்கேற்று இந்திய அணியை பெருமைக்குள்ளாக்கியவர் தான் யுவராஜ் சிங். சிறுவயது தொடங்கி கிரிக்கெட்டில் தனக்கென்று ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவரான யுவராஜ் சிங், கோடிக்கணக்கில் ரசிகர் பட்டாளத்தைக் குவித்து வைத்திருக்கிறார். அவரது பெருமைகளைக் கூறூவது அவ்வளவு எளிதல்ல.. இருந்தும் அவரது சாதனை கடலில் இருந்து ஒரு சில துளிகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | யுவராஜ் சிங்கிற்கு நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பிய கோவா சுற்றுலா துறை...காரணம் என்ன?

ரசிகர்களால் யுவி என செல்லமாக அழைக்கப்படும், 6.2 அடி உயரமான யுவராஜ் சிங், சண்டிகரில், 1981ம் ஆண்டு, டிசம்பர் 12ம் தேதி பிறந்தார். இடது கை பழக்கம் கொண்ட இந்த வீரர், இது வரை

  • 40 டெஸ்ட் போட்டிகள்

  • 304 ஒரு நாள் போட்டிகள்

    • 8,701 ரன்கள்

    • 111 விக்கெட்டுகள்

    • 17 சதங்கள்

    • 71 அரை சதங்கள்

    • 83.75 ஸ்ட்ரைக் ரேட்

  • 58 டி20 போட்டிகள்

  • 11,778 ரன்கள்

  • 1,245 பவுண்டரிகள்

  • 251 சிக்சர்கள்

  • 148 விக்கெட்டுகள்- என ஒரு சாதனை பட்டியலே வைத்திருக்கிறார்.

மேலும், ஐசிசி நாக்-அவுட் 2000- ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சர்வதேச கிரிக்கெட் போட்டியில், தனது முதல் ஒரு நாள் இன்னிங்ஸில் 80 பந்துகளில் 84 ரன்கள் குவித்திருந்தார் யூவி.

மேலும் படிக்க | பிறந்தநாளில் மகனை நினைத்து ஏங்கும் ஹர்திக்.. ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ வைரல்..!

2007 டி20 உலகக் கோப்பை போட்டியில் யுவராஜுக்கும் இங்கிலாந்து வீரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து யுவி மிகவும் பரபரப்பாக காணப்பட்டார். யுவி கிரீஸில் இருந்தபோது இங்கிலாந்தின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் பந்து வீச வந்தார். யுவராஜ் அவரது ஓவரின் முதல் இரண்டு பந்துகளிலும் சிக்ஸர் அடித்தார். 

யுவராஜுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அந்த இளம் வீரர்.  பின்னர் அமைதியானார். ஆனால் மூன்றாவது பந்திலும் யுவி சிக்ஸர் அடித்தார். யுவி நான்காவது பந்திலும் சிக்ஸர் அடித்தார். இதற்குப் பிறகு இன்று ஒரு ஓவரில் யுவி ஆறு சிக்ஸர்கள் அடிக்கப் போகிறார் என்று எல்லோரும் கருதினார்கள்.  அதேதான் அன்றும் நடந்தது. 

இந்தப் போட்டியில் யுவராஜ் 12 பந்துகளில் அவரது அரை சதத்தை பூர்த்தி செய்து 16 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். அவரது சாதனையை இதுவரை எந்த பேட்ஸ்மேனும் முறியடிக்க முடியவில்லை. 2011 உலகக் கோப்பையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும்  யுவி படைத்துள்ளார். 

மேலும் படிக்க | ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்கள்!! 15 வருடங்களுக்கு முன்பு இதே நாளில்!!

2011ம் ஆண்டு ஒரு நாள் உலகக்கோப்பையில், 4 அரை சதம், 1 சதம் என 362 ரன்கள் குவித்து, 15 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆட்ட நாயகன் என்ற விருதையும் பெற்று இந்திய அணிக்கு பெருமை சேர்த்தார்.

2017ம் ஆண்டு நடந்த இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச போட்டியில் வெறும் 127 பந்துகளில் 150 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.

பின், மூச்சுப் பிரச்சனையால் சிகிச்சைக்கு சென்ற யுவிக்கு “செமினோமா நுரையீரல் புற்றுநோய்” இருப்பது கண்டறியப்பட்டது, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யாரும் எதிராபாராத விதமாக 2019ம் ஆண்டு தனது ஓய்வையும் தெரிவித்த நிலையில், கிரிக்கெட் ரசிகர்களுக்கு மன வேதனையைத் தந்தது.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும், கிரிக்கெட் ஜாம்பவான்களில் யுவிக்கு என தனி இடம் கண்டிப்பாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இன்று தனது 41வது பிறந்தநாளைக் கொண்டாடும் யுவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | ஏலே... நீ ஒரு ஆர்டிஸ்டுன்னு நிரூபிச்சுட்டல்லே...