சசிகலாவுக்காக மொட்டை அடித்த ஆர்.பி.உதயகுமார்,..தொடர்பில் இருப்பவர்கள் எல்லாரையும் நீக்கணுமாம்.! ஒற்றை காலில் நிற்கும் முன்னாள் அமைச்சர்.!

சசிகலா முதல்வராக வேண்டும் என்று ஒருகாலத்தில் மொட்டை போட்ட உதயகுமார் தற்போது சசிகலாவுடன் பேசியவர்களை கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்றும் கூறியிருப்பது அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலாவுக்காக மொட்டை அடித்த ஆர்.பி.உதயகுமார்,..தொடர்பில் இருப்பவர்கள் எல்லாரையும் நீக்கணுமாம்.! ஒற்றை காலில் நிற்கும் முன்னாள் அமைச்சர்.!

சிறையில் இருந்து வெளிவந்ததும் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று கருதப்பட்ட சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். இது அதிமுக தலைவர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் அந்த மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. தேர்தல் முடிந்த சில நாட்களுக்கு பிறகு தன் அரசியல் வருகையை ஆடியோ வெளியிட்டு வெளிப்படுத்தினார் சசிகலா.

அதைத் தொடர்ந்து தொண்டர்கள்,முன்னாள் அமைச்சர்கள் என பலரிடம் பேசும் ஆடியோக்கள் தற்போது வரை வெளியாகியுள்ளன. இதன் தொடர்ச்சியாக சசிகலாவிடம் பேசிய 15 அதிமுகவினரை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. மேலும், சசிகலாவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றவும் உத்தரவிட்டுள்ளது. 

இதனால் சேலம்,விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சசிகலாவுடன் தொலைபேசியில் பேசுபவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மதுரையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பேசிய மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உதயகுமார், "உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவும் , நற்பெயரை அழிக்கும் நச்சுக் களைகளாகவும் தங்களை வளப்படுத்தி கொண்ட சிலர், அதிமுகவை அபகரித்துவிடலாம் என்று வஞ்சக வலையை விரித்துக் கொண்டிருக்கின்றனர். 

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்த திருமதி சசிகலா, இப்போது கழகம் இவ்வளவு வலுவும், பொலிவும், தொண்டர் பெரும்படையும், மக்கள் செல்வாக்கும் பெற்றிருப்பதைப் பார்த்ததும் அரசியலில் முக்கியத்துவத்தைத் தேடிக்கொள்ள அதிமுகவை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப்போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும் அதை ஊர் அரிய தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதுமாக விநோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.

சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்களை கழகத்தில் உடனடியா நீக்கவேண்டும். இனிமேலும், அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" எனக் கூறினார்.  

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஆர்.பி.உதயகுமார் சசிகலாவுக்காக மொட்டை போட்ட பழைய சம்பவங்களை கூறிவருகின்றனர். சாதாரண எம்.எல்.ஏவாக இருந்த இவரை பன்னீர்செல்வம் தான் வளர்த்துவிட்டு அமைச்சர் ஆகும் வரை கொண்டுவந்தார். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு ஜெயலலிதா கட்சியை கைப்பற்றியதும், பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியிலிருந்து அகற்றம் முயற்சிகள் நடைபெற்றது.

அப்போது ஜெயலலிதா சமாதிக்கு சென்ற ஆர்.பி.உதயகுமார் சசிகலா முதல்வராக வேண்டும் என்று மொட்டை போட்டார். அதன்பின் செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு ஆகியோரோடு சென்று  "தமிழகத்தின் முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும். 'கட்சிக்கும் ஆட்சிக்கும் அவரே தலைமை தாங்க வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றி இந்தத் தீர்மானத்தின் நகலை போயஸ் கார்டனுக்கே சென்று வழங்கினார் உதயகுமார். 

 உதயகுமார் தற்போது சசிகலாவுக்கு அதிமுகவுக்கும் சம்மந்தம் இல்லை என்றும், அவரோடு பேசியவர்களை கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்றும் கூறியிருப்பது அரசியல் அரங்கில் விஅந்த வாதத்தை ஏற்படுத்தியுள்ளது.