அப்பாவுக்காக நாம் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும்..! தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஐஸ்வர்யா..!

கொஞ்சம் டைம் வேணும் எனக் கேட்ட தனுஷ்..!

அப்பாவுக்காக நாம் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும்..! தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஐஸ்வர்யா..!

அப்பாவுக்காகவாவது சேர்ந்து வாழனும்ன்னு ஐஸ்வரியா தனுஷ்கிட்ட அழுது பொலம்ப.. எனக்கு கொஞ்சம் டைம் வேணும்ன்னு சொல்லிட்டாராம் தனுஷ்.. என்ன நடந்ததுன்னு பாப்போம்.. சினிமா நட்சத்திரங்கள் கூட பணியாற்ற கூட சக நடிகர் நடிகைகளையே திருமணம் பன்னிக்குறது புதுசு இல்ல. அதே மாதிரி திருமணம் பன்னிகிட்ட கொஞ்ச நாளுலையோ அல்லது கொஞ்ச வருஷத்துலயோ விவாகரத்து வாங்குறதும் புதுசு இல்ல. இதுல தாங்கள் புடுச்ச கைய விடாம வெற்றிகரமா திருமண வாழ்க்கைய தொடர்ந்துகிட்டு வர சினிமா தம்பதிகள் இங்க குறைவு தான். உதாரணத்துக்கு தமிழ் சினிமாவுல அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, இந்த ஜோடிகள் காதலித்து திருமணம் பன்னி கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாகவும் ஒன்னா குழந்தைகளோட எந்த ஒரு கிசுகிசுலயும் சிக்காம சந்தோஷமா வாழ்ந்துட்டு வராங்க. இந்த ஜோடிகளுக்கு அப்புறமா பெரிதும் பேசப்பட்ட ஜோடின்னா அது தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜோடின்னு சொல்லலாம். இவங்களும் காதலிச்சு தான் திருமணம் பன்னிகிட்டாங்க. ஆரம்பத்துல இவங்களோட காதல தெரிஞ்ச ரஜினி ரொம்ப கோபப்பட்டதாவும், அதுக்கு அப்புறமா நிறைய பெரிய தலைங்க எல்லாம் பேசி அவர சமாதனம் பன்னதாவும் சொல்லப்பட்டுச்சு.. 

இறுதியா 2004-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி இரண்டு பேருக்கும் திருமணம் நடந்து முடிஞ்சது. திருமணத்துக்கு அப்புறமா தனுஷோட சினிமா வளர்ச்சிங்குறது அபிரிவிதமா இருந்தது. தொடர்ந்து பல ஹிட் படங்கள கொடுத்து, தன்னோட மாமனார் படத்துக்கே இயக்குநர் ஆகுற அளவுக்கு வளர்ந்து வந்துட்டு இருக்காரு. நடிப்பு மட்டும் இல்லாம இயக்குநர், பாடலாசிரியர், பாடகர்ன்னு புகுந்து விளையாட ஆரம்பிச்சுட்டாரு தனுஷ். ஐஸ்வர்யா தனுஷ் தம்பதிக்கு 17 வயசுல யாத்ரான்னு, 14 வயசுல லிங்கான்னு இரண்டு மகன்கள் இருக்காங்க. இருந்தாலும் நேத்து தான் திருமணம் ஆன ஜோடி மாறி லைஃப் என்ஜாயி பன்னிட்டு இருந்தாங்க. கடந்த வருஷம் இரண்டு பேரும் ஏதோ ஒரு நிகழ்ச்சியில கலந்துட்டு இருந்தப்போ கூட தன்னோட மாமனார் நடிச்சு இருந்த பேட்ட படத்துல இடம் பெற்ற இளமை திரும்புதே பாடல, தன்னோட மனைவி ஐஸ்வர்யாக்காக ரொமாண்டிக்கா பாடி, அவங்கள வெட்கப்பட வச்சாரு தனுஷ். அதுமட்டும் இல்லாம ஹாலிவுட் படத்தோட படப்பிடிப்புக்காக குடும்பத்தோட அமெரிக்காவுல இருந்தப்போ ஐஸ்வரியாவ ஒரு கப்பல வச்சு போட்டோ எடுத்து அத தன்னோட ட்விட்டர்ல பகிர்ந்து இருந்தாரு தனுஷ். 

இவங்க லைஃப் செமயா என்ஜாயி பன்றாங்கப்பா.. வாழ்ந்தா இப்படி ஒரு ஜோடியா வாழனும்னு நிறைய பேரோட கண்ணு பட்டுடுச்சோ என்னவோ தெரியல. கடந்த 17-ம் தேதி இரண்டு பேரும் பரஸ்பரமா பிரிய போறதா அறிவிச்சது ரசிகர்கள் மத்தியில பேரிடியா இருந்தது. இருவரும் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" அப்டின்னு சொல்லி இருந்தாங்க. ஏற்கனவே சமந்தா-நாகசைதன்யா பிரிவுல இருந்து மீளாத ரசிகர்களுக்கு, ஐஸ்வர்யா-தனுஷ் பிரிவ அறிவிச்சது இன்னும் வருத்தத்த கொடுத்து இருந்துச்சு. 

தனுஷோட தந்தையான கஸ்தூரி ராஜா, இரண்டு பேரும் குடும்ப சண்டையால தான் பிரிஞ்சு இருக்காங்க சீக்கிரம் ஒன்னு சேர்ந்துடுவாங்க, அவங்கள ஒன்னு சேர்க்க தான் முயற்சி பன்னிட்டு வரதா சொல்லி இருந்தாரு. இந்த நிலையில, ஹைதராபாத்ல இருக்குற ராமோஜி ராவ் ஸ்டூடியோவுல தனுஷ் தன்னோட படபிடிப்புக்காக போக, டிப்ஸ் அன்ட் பிரேர்னா அரோரா ஆல்பத்திற்கான பணிக்காக ஐஸ்வர்யாவும் ஹைதராபாத் போக, இரண்டு பேரும் எதிர்பாராத விதமா சித்தாரா ஹோட்டல தங்கியிருக்காங்க. ஏற்கனவே தன்னோட இரண்டாவது பொன்னோட வாழ்க்கைய இப்போ தான் ஓரளவு செட்டில் பன்னிட்டு பெருமூச்சு விட்ட ரஜினிக்கு, ஐஸ்வர்யா-தனுஷோட பிரிவு மறுபடியும் பெரிய சோகத்த கொடுத்து இருக்கு. மன வேதனையில கேளம்பாக்கத்துல இருக்குற பண்ண வீட்டுல தனிமையில நேரத்த கழிக்கிறாராம் ரஜினி. இத பாத்து வருத்தப்பட்ட ஐஸ்வர்யா, அப்பாவுக்காகவாது நாம இறங்கி போனும்னு, தனுஷ் தங்கியிருந்த அறைக்கு போய், தனுஷ் கிட்ட பேசிப் பாத்துருக்காங்க. அப்பா ரொம்ப கவலைப் படுறாரு, அவருக்காகவாது நாம மறுபடியும் சேர்ந்து வாழனும், நான் அவசரப்பட்டுடேன்னு புலம்பி தள்ளி இருக்காங்க. சரி இறங்கி வந்த மனைவிட்ட தனுஷும் சமாதானம் ஆகி ஒன்னு சேர்ந்துடுவாங்கன்னு பாத்தா, இரண்டு பேரும் பேசி தான் பிரிவு முடிவ எடுத்தோம்.. இப்போ நீ மாறிட்ட ஆனா என்னால அப்டி உடனே மாற முடியாது. எனக்கு கொஞ்சம் டைம் வேணும்னு சொல்லிட்டாராம் தனுஷ். அட என்னப்பா நீ? மனைவி இறங்கி வந்தா நீயும் கொஞ்சம் இறங்கி போயிருக்கலாம்ல அப்டின்னு அவரோட ரசிகர்கள் தங்களோட கருத்துகளை சொல்லிகிட்டு வராங்க...