ஜி.எஸ்.டி கவுன்சிலில் அடிப்படை குறைபாடு இருப்பதாலே அதை எதிர்க்கிறோம்.! நிதியமைச்சர் பிடிஆர் ஆவேசம்.! 

ஜி.எஸ்.டி கவுன்சிலில் அடிப்படை குறைபாடு இருப்பதாலே அதை எதிர்க்கிறோம்.! நிதியமைச்சர் பிடிஆர் ஆவேசம்.! 

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி முக வெற்றிபெற்றது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவரது அமைச்சரவையில் நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜி.எஸ்.டி கூட்டத்தில் அவர் பேசியது இந்திய அளவில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரபல ஆங்கில நாளேடான டெக்கான் கிரோனிக்கல்ஸ் நாளிதழுக்கு அவர் பேட்டியளித்தார். 

அதில் செய்தியாளர் "ஜி.எஸ்.டி.யில் சீர்திருத்தங்களை தி. மு.க முன்வைத்து வருகிறது. நீங்கள் மேற்கொள்ள விரும்பும் சீர்திருத்தங்கள் என்ன?" என்ற கேள்விக்கு "இந்த அமைப்பில் அடிப்படை குறைபாடுகள் இருப்பதாக நாங்கள் கருதுவதால் ஆழமான சீர்திருத்தத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம். வரிகள் வசூலிக்கப்படும் விதம், அவை விநியோகிக்கப்படும் விதம் ஆகிய இரண்டும் சிக்கலானவை. சில அதிகாரிகள் விகிதங்களை நிர்ணயித்த பிறகு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு வெறுமனே தெரிவிப்பது எங்களுக்கு சரியான வழி முறையாக தோன்றவில்லை. அவர்கள் இந்த அதிகாரம் எப்படி வந்துது எவ்வாறு அங்கீகரிக்கப்பட்டனர் என்று நாங்கள் கேட்கிறோம். அவர்கள் (ஒன்றியம்) அத்தகைய அதிகாரங்களை அதிகாரிகளுக்கு  வழங்கினால், எடுக்கப்படும் முடிவுகளுக்கு குறைந்தபட்சமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் ஒப்புதலை இந்த அதிகாரிகள் பெற வேண்டும். கவுன்சில் தான் இந்த முன்மொழிவை அங்கீகரிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படாத தனிநபர்கள் தீர்மானித்துள்ள விகிதங்கள் பற்றி எங்களுக்கு வெறுமென தெரிவித்துவிட்டு கடந்து செல்ல முடியாது. அடிப்படைப் பிரச்சினை என்னவென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் தொடர்புடைய இந்த தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளின் பங்கு என்ன? அமைப்பில் ஒரு அடிப்படை பலவீனம் உள்ளது, மற்றும் மாநிலங்கள் வெளிப்படையாக அல்லது மறை முகமாக பல பிரச்சினைகளில் களமாட வேண்டியுள்ளது. ஒன்றிய அரசிடமிருந்து ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்றும், இழப்பீடு உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். நாம் பேசிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் கூட நிறைய தொகைகள் நிலுவையில் உள்ளன" எனக் கூறினார்.