1992 இல் என்ன நடந்தது? பாகிஸ்தான் ரசிகர்களின் நம்பிக்கைக்கு காரணம் என்ன?

உலக கோப்பை டி20 தொடரில் முதல் அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 1992 இல் வெற்றி பெற்றதைப் போன்று இந்த தொடரில் பாகிஸ்தான் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் பாகிஸ்தான் ரசிகர்கள்.
நியூசிலாந்து vs பாகிஸ்தான்:
நியூசிலாந்து vs பாகிஸ்தான் இதுவரை விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் பாகிஸ்தானே வென்றுள்ளது. இதுவரை மூன்று முறை உலகக் கோப்பை, உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானும் நியூஸிலாந்தும் மோதிக் கொண்டிருக்கின்றன. ஒருமுறைகூட நியூஸிலாந்து வென்றதில்லை.
3 முறை தோல்வி:
1992-ஆம் ஆண்டு, 50 ஓவர் உலகக் கோப்பை, 1999-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, 2007-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை ஆகிய மூன்று தொடர்களிலும் பாகிஸ்தான் அணி நியூஸிலாந்து அணியை வீழ்த்தியிருக்கிறது. அதுவும் அரையிறுதிப் போட்டிகளில் தான்.
இதையும் படிக்க: வரலாற்றை மாற்றி எழுதுமா நியூசிலாந்து..?
1992 உலககோப்பை:
1992 ஆம் ஆண்டு உலககோப்பை தொடரில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. ஆனால் லீக் சுற்றி போது பாகிஸ்தான் அரை இறுதிக்கு செல்லும் என்று கூட யாரும் நினைத்திருக்கமாட்டார்கள். லீக் சுற்றில் விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றி பெற்றிருந்த பாகிஸ்தான், அடுத்த இரண்டு அடுத்தடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவையும், இலங்கையையும் வீழ்த்தி அரை இறுதிக்கு சென்றது.
பாகிஸ்தானின் வெற்றி:
அரைஇறுதியில் நியூசிலாந்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் யாரும் எதிர்பாராத விதமாக நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இறுதி போட்டியில் வெறும் 74 ரன்கள் மட்டுமே எடுத்த பாகிஸ்தான், இங்கிலாந்தை மொத்தமக சுருட்டி வெற்றி பெற்றது.
1992 vs 2022:
1992 உலக கோப்பை போட்டியுடன் தற்போதைய தொடரை தொடர்புபடுத்தி பாகிஸ்தான் ரசிகர்கள் பேசி வருகின்றனர். அதற்கான காரணங்களாக பாகிஸ்தான் ரசிகர்கள் சொல்வது,
- முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் தோல்வி
- லீக் சுற்றில் இந்தியாவுடன் தோல்வி
- கடைசி மூன்று போட்டிகளிலும் தொடர் வெற்றி
- கடைசி நாள்வரை ஒரு புள்ளிக்காக காத்திருந்து அரையிறுதிக்குத் தகுதி
எதிர்பார்ப்பு :
இன்றைய ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால், நாளை இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் இறுதி போட்டியில் மோதும்.
சிட்னி மைதானத்தை பொறுத்தவரை முதலில் பேட் செய்யும் அணியே வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளதால், போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது