தமிழ்நாடு என்ன ஊராட்சி அரசா? ஊராட்சி அரசின் முதல்வரா ஸ்டாலின்? எல்.முருகன் பாய்ச்சல்

தமிழ்நாடு என்ன ஊராட்சி அரசு? ஊராட்சியின் முதல்வரா ஸ்டாலின்? எனவும் பாஜக மாநில தலைவர் முருகன் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு என்ன ஊராட்சி அரசா? ஊராட்சி அரசின் முதல்வரா ஸ்டாலின்? எல்.முருகன் பாய்ச்சல்

தமிழ்நாடு என்ன ஊராட்சி அரசு? ஊராட்சியின் முதல்வரா ஸ்டாலின்? எனவும் பாஜக மாநில தலைவர் முருகன் கேள்வி எழுப்பினார்.

பாரதிய ஜன சங்க நிறுவனர் டாக்டர்.ஷாம் பிரசாத் முகர்ஜிyஇன் 68-வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மலர்தூவி மரியாதை செலித்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநர் உரை முதலமைச்சருக்கு புகழாரம் சூட்டும் ஏமாற்றமளிக்கும் உரையாக இருந்ததாக தெரிவித்தார். இல்லதரசிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்துவதாக கூறியது குறித்தோ,கேஸ் மானியம் பற்றியோ, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்தோ நடவடிக்கை இல்லாமல் வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் இந்த அரசு வந்து 40 நாள் ஆகியுள்ளது, ஆனால் கமிட்டி அமைப்பதை மட்டும் பணியாக கொண்டு கமிட்டி அரசாக தான் உள்ளது எனவும், நீட் தேர்வு குறித்து ஆராய அமைத்துள்ள கமிட்டி தேவையில்லாத ஒன்று, இதனை கலைக்க கோரி உயர்நீதி மன்றத்தில் பாஜக சார்பில் வழக்கு தொடுத்துள்ளதாக கூறிய அவர் நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை குழப்பாமல், அவர்களை தயார் படுத்துங்கள் என்றார்.

மேலும், அணில்களால் தான் மின் துண்டிப்பு ஏற்படுவதாக அமைச்சர் கூறியுள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் மின்வெட்டு இல்லாமல், தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்துள்ளது. ஊரடங்கில் பல நிறுவனங்களும் செயல்படாமல் இருக்கும் நிலையில் ஏன் மின்வெட்டு இருக்கிறது, முதலமைச்சர் தெளிவான விளக்க அறிக்கை தர வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், இந்திய அரசியலமைப்பில் எங்கும் குறிப்பிடாத வகையில் ஒன்றிய அரசு என அழைப்பது அம்பேத்கரை அவமதிக்கும் செயல் எனவும், ஒன்றிய அரசு என குறிப்பிட்டால் பாஜக ஏன் பதருகிறது என்ற செய்தியாளரின் கேள்விக்கு நாங்கள் ஏன் பதற வேண்டும், மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதே தவறானது என்றார். மேலும், தமிழ்நாடு என்ன ஊராட்சி அரசு? ஊராட்சியின் முதல்வரா ஸ்டாலின்? எனவும் பாஜக மாநில தலைவர் முருகன் கேள்வி எழுப்பினார்.