மக்களுக்கான வாழ்த்தா இல்லை அரசியல் பதிலடியா? ஓபிஎஸ், இபிஎஸ் வாழ்த்துப்பதிவில் உள்ள சூட்சுமம் என்ன?

மக்களுக்கான வாழ்த்தா இல்லை அரசியல் பதிலடியா? ஓபிஎஸ், இபிஎஸ் வாழ்த்துப்பதிவில் உள்ள சூட்சுமம் என்ன?

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துப்பதிவு.

கிருஷ்ண ஜெயந்தி:

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதி அன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணரின் கோயில்கள் அலங்கரிக்கப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. 

தலைவர்கள் வாழ்த்து:

கிருஷ்ண ஜெயந்தி நாளிற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.ஏன்.ரவி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பல மாநில முதலமைச்சர்களும், தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ் - இபிஎஸ்:

அதிமுகவில் உயர் அதிகாரம் யாருக்கு என்பதில் போட்டி போட்டு வரும் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தங்களில் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து செய்தியில் கூட தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவம் விதமாகவே பதிவிட்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. 

மேலும் படிக்க: தன் தரப்பு வாதத்தை கேட்டபிறகே உத்தரவு : ஓ.பி.எஸ். கேவியட் மனு தாக்கல் !!

அழைப்பு: 

ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, தருமம் மீண்டும் வென்றதாக கூறிய ஓபிஎஸ், ஆகஸ்ட் 18 இல் செய்தியாளர்களை சந்தித்த போது, அனைவரும் இணைந்து அதிமுக கட்சியை வழிநடத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். நடந்தவை மடம்தாவியாகவே இருக்கட்டும், நடப்பவை அனைத்தும் நல்லவையாக அமையட்டும் எனக் கூறிய ஓபிஎஸ், அனைத்தையும் மறந்து, அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, டி.டி.வி. தினகரன் அனைவரும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

மறுப்பு:

ஓபிஎஸ் இன் அழைப்பை திட்டவட்டமாக நிராகரித்த இபிஎஸ், யாருக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தினாரோ அவரையே மீண்டும் கட்சிக்குள் அழைக்கிறார், அவருடன் எப்படி இணைந்து செயல்பட முடியும்? பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார், அவருடன் இணைவு என்பது சாத்தியமில்லை என மறுத்துக் கூறியிருந்தார்.

இபிஎஸ் வாழ்த்துப்பதிவு:

கிருஷ்ண ஜெயந்தி நாளில்,  "எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது; எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்” என்ற ஶ்ரீகிருஷ்ணரின் உபதேசத்தை மனதில் கொண்டு அனைத்து மக்களின் நன்மைக்கு உழைப்போம் என்று கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம் என காலை 9.44 மணிக்கு சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார் இபிஸ்.

பதிவின் சூட்சுமம் என்ன?

அதிமுக பொதுக்குழு தொடர்பான உயநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் இபிஎஸ். அந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது. 

"நடப்பவை அனைத்தும் நல்லவையாகவே நடக்கட்டும்” என்ற வரி, உயர் நீதிமன்றத்தில் வர இருக்கும் தீர்ப்பை சூட்சமமாக கூறுவதாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

ஓபிஎஸ் வாழ்த்துப்பதிவு:

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்ததன் நோக்கமே இந்த உலகத்தில் உள்ள தீமைகளை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காகத்தான். நம் அனைவரும் தீமைகளை முறியடித்து உயரிய குறிக்கோளுடன் வாழ வேண்டும்.

தர்மம் தழைக்க வேண்டும்;
'அமைதி, வளம், வளர்ச்சி' 
பெருக வேண்டும். என காலை 10.42 மணிக்கு சமூக வலைதளத்தில் பதிவுட்டுள்ளார் ஒபிஸ்

பதிவின் சூட்சுமம்?:

தர்மயுத்த நாயகனாக பார்க்கப்படும் ஓபிஎஸ், "தருமம்  தழைக்க வேண்டும்" என பதிவிட்டு இருப்பது, உயர்நீதிமன்றத் தீர்ப்பு தனக்கு சாதகமாக வரும், அது தான் தர்மம் என கூற வருகிறாரோ என கருத்து தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.