இபிஎஸ் அடுத்து செய்யப்போவது என்ன? இபிஎஸ்க்கு 3 வழிகள் தான்..!

இபிஎஸ் அடுத்து செய்யப்போவது என்ன? இபிஎஸ்க்கு 3 வழிகள் தான்..!

பொதுக்குழு தொடர்பான வழக்கு ஓபிஎஸ்க்கு சாதகமாக  வந்திருக்கும் நிலையில், இபிஎஸ் இன் அரசியல் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு:

கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு தொடுத்தது. உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.. சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிந்துவிட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கில் இன்று காலை 11.30 மணிக்கு  தீர்ப்பு வழங்கினார். இதில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது எனவும், ஜூன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலை தொடர வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஓபிஎஸ், இபிஎஸ் இரண்டு பேருமே இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

7 வாதங்கள்:

இந்த வழக்கில் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக தீர்ப்பு வர, அதிமுக பொதுக்குழுவை சட்டப்படி கூட்டவில்லை, பொதுக்குழுவிற்கு அழைப்பு விடுத்தது செல்லாது, 5 ஆண்டுகளுக்கு இன்னும் பதவிக்காலம் உள்ளது என்பது உள்ளிட்ட அவரது 7 வாதங்கள்தான் முக்கியமான காரணமாக அமைந்தது.

பணம் தோற்றது நீதி வென்றது:

ஓபிஎஸ்ற்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். பணம் தோற்றது, நீதி வென்றது எனவும், தருமம் மீண்டும் வென்றதும் எனவும் கோஷங்கள் எழுப்பி, மேளா கொண்டாட்டத்தில் ஈறுப்பட்டு வருகின்றனர். ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதையை செலுத்த இருக்கிறர் ஓபிஎஸ்.

ஓபிஎஸ் வெற்றி:

சட்டத்தை மட்டுமே நம்பிக்கொண்டு இருந்த ஓபிஎஸ்க்கு தற்போது சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்யே தொடர்வார். ஜூன் 23 இல் இருந்து அதிமுகவில் நடந்த எதுவுமே செல்லாது என்பது ஓபிஎஸ்க்கு பெரும் வெற்றியாகவும், இபிஎஸ்க்கு பெரும் பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.

இபிஎஸ்ஸின் அரசியல் எதிர்காலம்?:

இந்த வழக்கிற்கு பின்னல் இபிஎஸ் இன் அரசியல் எதிர்காலம் என்பது பெரும் பின்னடைவை அடைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இனி அதிமுகவில் தன்னுடைய அரசியல் பயணம் குறித்து என்ன செய்வது என்பது குறித்து இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா மூவரும் இணைந்து பயணிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கான மூன்று வழிகளையும் ஆராயவேண்டியுள்ளது. 

3 வழிகள்:

இபிஎஸ்க்கு அதிமுகவில் நீடிக்க மூன்று வழிகள் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது. 

1.  ஓ.பன்னீர்செல்வத்துடன், இபிஎஸ் இணக்கமாக செல்வது. அதாவது அவரிடம் சமாதானம் பேசி இருவரும்  ஜூன் 23 க்கு முன்பு இருந்தது போன்று இருக்க வேண்டும்.

2. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும்.

3. ஒருங்கிணைப்பாளர், இணைஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடரும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அது காலாவதியாகும் வரை இபிஎஸ் பொறுமையா இருக்க வேண்டும்.

ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பொதுக்குழு;

ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பொதுக்குழு கூட்ட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவவிட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு ஜூன் 23 இல் பொதுக்குழு நடத்தப்பட்டு விட்டது என ஓபிஎஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டு மீண்டும் பொதுக்குழு கூட்ட வாய்ப்பில்லை எனது ஓபிஎஸ்க்கு மேலும் பலமாகவே பார்க்கப்படுகிறது.