அதிமுக ஒபிஸ்க்கு... அதிமுக அலுவலக சாவி யாருக்கு? 2 ஆப்ஷன்கள்..!

அதிமுக ஒபிஸ்க்கு... அதிமுக அலுவலக சாவி யாருக்கு? 2 ஆப்ஷன்கள்..!

அதிமுக தலைமை அலுவலக சாவி தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

அதிமுக அலுவலகம் சீல்:

கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் தற்காலிக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அதே நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் நுழைந்தார். அதை இபிஎஸ் ஆதரவாளர்கள் எதிர்க்க, அங்கு மோதல் மூண்டது. மேலும் அங்கு நடந்த வன்முறையில் பொதுமக்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து சட்டம்-ஒழுங்கு பிரச்னையை அடிப்படையாகக் கொண்டு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை ஆட்சியர் சீல் வைத்தார். 

மேலும் படிக்க: 2-வது தர்ம யுத்தத்தில் வெற்றி பெற்ற ஓபிஎஸ்..! உயர்நீதிமன்ற தீர்ப்பின் விளைவுகள் என்னென்ன?

இபிஎஸ் இடம் சாவி:

இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிட்டது. இதையடுத்து உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிராக ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இன்று விசாரணை:

அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆகஸ்ட் 19-ம் தேதிக்குள் பட்டியலிட்டு விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது.இந்த நிலையில், இவ்வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வருகிறது.  

பொதுக்குழு வழக்கு தீர்ப்பு:

ஆகஸ்ட் 17 அன்று, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 11 அன்று நடந்த பொதுக்குழு செல்லாது எனவும், ஜூன் 23 க்கு முன்பு இருந்த நிலையே அதிமுகவில் தொடரும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அது ஓபிஎஸ்க்கு கிடைத்த பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. அனைத்து சட்ட போராட்டங்களிலும் வெற்றி பெற்று வந்த இபிஎஸ்க்கு இந்த தீர்ப்பு சற்று பின்னடைவைக் கொடுத்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க: இபிஎஸ் எடுத்த முடிவு..! இது எதிர்பார்க்கப்பட்ட முடிவு தான்..!

சாவி யாருக்கு:

அதிமுக அலுவலக சாவி யாருக்கு கிடைக்கும் என்பது பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாகியுள்ளது. நேற்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் என்பதால் அவரிடம் வழங்கப்படலாம். அல்லது, அதிமுக அலுவலக சாவிக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவருக்கும் உரிமை உண்டு என இருவருக்கும் உரிமை கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உச்சநீதிமன்றம் என்ன சொல்லப்போகின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.