அப்பா அர்ச்சகர்... மின்மயானத்தில் பணியாற்றும் பிராமணப் பெண் ஜெயந்தி!!

மின்மயானத்தில் பணியாற்றும் பிராமணப் பெண் ஜெயந்தியின் வாழ்க்கையில் எதிர் கொண்ட பிரச்சனைகளை காண்போம்

அப்பா அர்ச்சகர்... மின்மயானத்தில் பணியாற்றும் பிராமணப் பெண் ஜெயந்தி!!

நாமக்கல் அருகே கூலிப்பட்டி கிராமத்தில் பிறந்த பெண் ஜெயந்தி. இவரின் தந்தை கோயில் அர்ச்சகராக பணியாற்றியுள்ளார்.

ஜெயந்தி தனது கல்லூரி படிப்பின் போது வேற ஜாதியைச் சேர்ந்த வாசுதேவன் மீது காதல் வயப்பட்டு பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துள்ளார். ஜெயந்திக்கு இரட்டை குழந்தைகள் உள்ளன.

திடீரென ஒரு நாள் அவரது தந்தை உடல்நல குறைவு காரணமாக இறந்து விட்டதாக, கிடைத்த செய்தி ஜெயந்திக்கு பேரிடியாக விழுந்தது.

பின் காலங்கள் உருண்டோட தையல் தொழிலை கையில் எடுத்தார் ஜெயந்தி. அதுவும் சில காலங்கள் மட்டுமே நிலைத்தது என்று தான் கூற வேண்டும்.

தையல் மிஷினை மிதிக்க மிதிக்க வயிறு வலி அதிகமாகி, சீரியஸான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயந்தி.  உயிருக்கு ஆபத்தான நிலையை கடந்து அறுவை சிகிச்சை முடிந்து ஜெயந்தி உடல் நலத்துடன் வீடு திரும்பினார்.

அத்துடன் முடியவில்லை, குடும்ப சூழல் காரணமாக  வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் ஜெயந்திக்கு வந்துவிட்டது.

செய்வதறியாமல் திகைத்து நின்ற ஜெயந்திக்கு 4 வருடங்களுக்கு முன்னர் மின்மயானத்தில் தோட்டப் பராமரிப்பு வேலைக்கு சென்றது நினைவிற்கு வந்துள்ளது.

சரி என்று ஜெயந்தி மற்றும் மற்றொரு பெண்ணும்  தோட்டப் பராமரிப்பு வேலையில் சேர்ந்துள்ளனர்.  மண்டை ஓடு, எலும்புகளாவும் இருந்த இடத்தை 3 மாதத்தில் மலர் தோட்டமாக மாற்றியுள்ளனர்.

இப்படியாக காலங்கள் கடந்து போக திடீரென ஒரு திருப்பம் ஏற்பட்டது. சிதையூட்டியாக இருந்த ஆண்கள் வேலையை விட்டு செல்ல, தான் அந்த வேலை செய்வதாக துணிந்து நின்ற ஜெயந்தியை கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

பின் ஒரு வழியாக வீட்டில் உள்ள கணவர், உறவினர்கள் எல்லோரிடமும் சம்மதம் வாங்கிய ஜெயந்தி, மின்மயானத்தில் சிதையூட்டியாக வேலைக்கு சேர்ந்தார்.

தன்னோட பணியை நேர்த்தியாக செய்த,  ஜெயந்தியை ஒரே வருடத்திற்குள் மின்மயானத்திற்கு மேனேஜர் நிர்வாகம் நியமித்தது.

அதுக்காக சிதையூட்டும் வேலை சுலபமானது இல்லை என தெரிவித்த ஜெயந்தி,  இயற்கை மரணம் எய்தினவங்களை சிதையூட்டும் போது, 45 நிமிடங்களில் சாம்பல் எடுத்துவிடலாம், ஆனால் கூடற்கூறு செய்த உடலாக இருந்தா, சிதையூட்டின சில மணி நேரத்திலேயே, சூடு காரணமாக  எல்லா உறுப்புகளும் தனியா தனியாக சிதறி விழுமாம், அதை எல்லாம் மறுபடியும் எடுத்து, மரக்கட்டை மேல போட வேண்டும் என்று வேதனையுடன் கூறினார்.

தனது சிறுவயதில் பக்கத்தில் யாரேனும் முட்டை சாப்பிட்டால் கூட மூக்கை மூடி கொள்வேன், தற்போது பிண வாடை பழகி விட்டதாக கூறி ஜெயந்தியின் கண்களில் படர்கிறது புன்னகை.

இவரல்லவோ புதுமைப் பெண்,
பாராட்டுவோம் அவரது தன்னம்பிக்கையை,
போற்றுவோம் ஜெயந்தியின் கடமையை...