சசிகலாவுக்கு எதிராக ராஜ் சத்யன் தனி ரூட்... அம்மான்னு பேசினால் தூக்கி வீசுங்க!! அதிமுக ஐடி விங் அந்த பிளான்

சசிகலாவுக்கு எதிராக ராஜ் சத்யன் தனி ரூட்... அம்மான்னு பேசினால் தூக்கி வீசுங்க!! அதிமுக ஐடி விங் அந்த பிளான்

சிறையில் இருந்து வெளிவந்ததும் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று கருதப்பட்ட சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். இது அதி முக தலைவர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் அந்த மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. தேர்தல் முடிந்த சில நாட்களுக்கு பிறகு தன் அரசியல் வருகையை ஆடியோ வெளியிட்டு வெளிப்படுத்தினார் சசிகலா.

அதைத் தொடர்ந்து தொண்டர்கள், முன்னாள் அமைச்சர்கள் என பலரிடம் பேசும் ஆடியோக்கள் தற்போது வரை வெளியாகியுள்ளன. இதன் தொடர்ச்சியாக சசிகலாவிடம் பேசிய 15 அதி முகவினரை கட்சியிலிருந்து நீக்கி அதி முக தலைமை உத்தரவிட்டுள்ளது. மேலும், சசிகலாவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றவும் உத்தரவிட்டுள்ளது. 

இதனால் சேலம்,விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சசிகலாவுடன் தொலைபேசியில் பேசுபவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மதுரையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதன் தொடர்ச்சியாக மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ராஜ் சத்யன் தலைமையில் காணொளி காட்சி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் 18 மாவட்டங்களின் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "ஜெயலலிதா கற்றுத்தந்த பாதையில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுப்பாட்டோடு தொண்டர்களின் பேராதரவோடு கழகத்தை வழிநடத்தி செல்கின்றனர் .நாளுக்குநாள் கழகம் வலுவும், பொலிவும், மக்கள் செல்வாக்கும் பெற்று சிறப்புடன் செயலாற்றி வரும் நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, தற்போது ஒவ்வொரு நாளும் அ.தி. மு.க பற்றி சம்பந்தமில்லாத கருத்துக்களை தொலைபேசி மூலம் சிலருடன் பேசி வருவதும், அதை ஊரறிய ஊடகங்களில் ஒளிபரப்புவதுமாக செயல்படுகிறார்.

ஆனால், அ.தி. மு.க-வின் ஒன்றரை கோடி தொண்டர்கள் அவரின் செயலை நம்பவும் இல்லை, ரசிக்கவும் இல்லை. அ.தி. மு.க மக்களின் பேரியக்கமாகவே வரலாற்றில் நிலை பெற்றுள்ளதே தவிர ஒரு குடும்பத்தினர் வசப்படுத்தி கொள்ளும் வகையில் என்றைக்கும் இருக்காது. சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி கழகத்தின் புகழுக்கு களங்கம் உண்டாக்கிய அனைவரையும் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கவேண்டும்.


இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கழக ஒருங்கிணைப்பாளர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் சசிகலாவுக்கு எதிராக அதி முக தீவிரமாக செயல்பட்டு வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.