உன் குடும்பம் கடலூர்ல தானே இருக்கு..! இராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்த விசிக பிரமுகர்..!

உன் குடும்பம் கடலூர்ல தானே இருக்கு..! இராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்த விசிக பிரமுகர்..!

டெல்லியில் உள்ள இராணுவ வீரர் ஒருவருக்கு விசிக பிரமுகர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை அது தொடர்பாக பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

குரு ஆடியோ:

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராணுவ வீரர் குரு. பட்டியலினத்தை சேர்ந்த இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை கண்டித்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் தனித் தமிழ்நாடு கேட்கும் திருமாவளவனுக்கு எனது கேள்வி இதுதான், தமிழகத்தில் தனியாக நின்று ஒரு வார்டில் உங்களால் வெற்றி பெற முடியுமா? ஒரு நாடு மாதிரி தனித் தமிழ்நாடு வேண்டும் என கேட்கிறீர்கள்.

ஆட்சியாளர்களின் தவறு:

இதற்குதான் நாங்கள் இந்திய ஒருமைப்பாட்டையும் தேச பக்தியையும் வளர்க்க வேண்டி ராணுவத்தில் சேர்ந்துள்ளோமா, நாட்டை இரண்டாகவும் மூன்றாகவும் பிளக்கத்தானா? இருக்கும் நாட்டை ஒன்று சேர்க்கத்தான் நாங்கள் ராணுவத்தில் சேர்ந்திருக்கிறோமே தவிர நாட்டை பிரித்து பார்ப்பதற்கு அல்ல. உங்கள் சுயநிலத்திற்காக ஒரு தனிநாடு கேட்பீர்கள். அதன் பிறகு மாவட்டத்தை பிரித்து கொடு என்பீர்கள், எந்த தைரியத்தில் தமிழகத்தை தனிநாடாக மாற்ற வேண்டும் என கேட்கிறீர்கள்? தனி தமிழ்நாடு கேட்கும் அளவுக்கு உங்களை இவ்வளவு தூரம் பேச வைத்தது ஆட்சியாளர்களின் தவறு ஆகும்.

VCK Activist Manimaran threatens Army personnel?

வந்தே மாதரம் சொல்ல வைப்போம்:

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எது வேண்டுமானாலும் பேசுவீர்களா? நாட்டுப் பற்றை வளர்க்க போராடிக் கொண்டிருக்கும் நாங்கள் என்ன இளிச்சவாயன்களா? நீங்கள் ஒரு நாள் வீதியில் நின்று தனித்தமிழ்நாடு வேண்டும் என போராடி பாருங்கள். உங்கள் வாயால் வந்தே மாதரம் சொல்ல வைப்போம் என அந்த வீடியோவில் அந்த ராணுவ வீரர் கூறியிருந்தார்.

மிரட்டல்:

இந்த அடியோ சமூக வலைதளங்களின் வைரலான நிலையில், விசிகவை சேர்ந்த சில பிரமுகர்கள் இராணுவ வீரர் குருவை மிரட்டியதாக தெரிகிறது. விசிக வின் கடலூர் மாவட்டம் லத்தூர் ஒன்றியச் செயலாளராக இருக்கும்  மணிமாறன்,  எப்படி நீ திருமாவளவனை தரக்குறைவாக பேசலாம்? நீ பேசியது தவறும் அவரிடம் மரியாதையாக மன்னிப்பு கேள் என குருவிற்கு அழைபேசியில் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. 

பயந்துருவோமா?

அதற்கு அந்த ராணுவ வீரரோ, இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான்காரனின் துப்பாக்கியையும், பீரங்கியையும் காட்டினாலே நாங்கள் பயப்பட மாட்டோம். நீங்க போன் போட்டு மிரட்டினா நாங்கள் பயந்துடுவோமா? நான் யாருக்கும் பயப்படமாட்டேன், மன்னிப்பும் கேட்க மாட்டேன் என கூறியுள்ளார். 

உன் குடும்பம்..:

நீ டெல்லியில் இருக்கிறாய், ஆனா உன் குடும்பம் எல்லாம் தமிழ்நாட்டில் தானே இருக்காங்க. அவங்க உயிரோட இருக்கணும்னா மன்னிப்பு கேள் என மணிமாறன் மிரட்டியதாக தெரிகிறது.. அப்போது மணிமாறனுடன் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளும் ராணுவ வீரரை ஆபாச வார்த்தைகளால் வசைபாடியுள்ளனர். 

இந்த ஆடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், மணிமாறனை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அண்ணாமலை பதிவு:

இந்த விவகரம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, தேசத்தை காப்போரை மிரட்டி விட்டு தப்பி விடலாம் என்று தமிழகத்திலே ஒரு அரசியல் கட்சி நினைத்துக் கொண்டிருக்கிறது. தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே.

CRPF வீரர் சகோதரர் குருவிடம் தொலைப்பேசி மூலமாக உரையாடினேன். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும்  தமிழ்நாடு பாஜக துணை நிற்கும் என குறிப்பிடுள்ளார்.