உதயநிதியால் திமுகவினருக்கு வந்த ஆப்பு..  கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு ஸ்டாலின் உத்தரவு.! 

உதயநிதியால் திமுகவினருக்கு வந்த ஆப்பு..  கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு ஸ்டாலின் உத்தரவு.! 

பேனர் வைக்கும் கலாச்சாரத்தை திமுகவினர் அறவே கைவிட வேண்டும் என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த சில நாட்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சி காலத்தில் பேனர்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டதால் தங்கள சார்பில் பேனர்கள் வைக்க மாட்டோம் என்று உயர்நீதிமன்றத்தில்  கட்சி தலைவர் ஸ்டாலின் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்ததை நினைவு கூறவேண்டும்.

பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கட்சித் தலைமை தெரிவித்துள்ள நிலையில், பெரும்பாலானோர் அதை கடைபிடித்து வருகின்றனர். ஆனாலும்,  ஆங்காங்கே கட்சி சார்பில் பேனர்கள் வைப்பது தொடர்கிறது, இது போன்ற நடவடிக்கைகளை கட்சித் தலைமை ஒருபோது, அனுமதிக்காது, இதை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் திமுக தலைமையிலிருந்து இது போன்ற அறிக்கைகள் வருதே உதயநிதி ஸ்டாலினால் தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி செயலாளர் பதவி கொடுத்த போது அவரை பாராட்டி பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இது சர்ச்சையான நிலையில் உதயநிதியின் புகைப்படத்தை கட்சி பேனர்களில் பயன்படுத்த கூடாது என்று கட்சி தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டது. 

ஆனால்,அதுஎல்லாம் கொஞ்சம் நாட்களுக்கு தான் பின்பற்றப்பட்டது. அதன்பின் மீண்டும் அனைத்து பேனர்களிலும் உதயநிதி ஸ்டாலினின் முகம் இடம்பெற்றது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல். ஏவாக பொறுப்பேற்றதும் தமிழகம் முழுக்க ஒட்டப்பட்ட பேனர்களின் உதயநிதியின் புகைப்படம் இடம்பெற்றது. குறுகிய காலத்தில் உதயநிதிக்கு கொடுக்கப்பட்ட இந்த பொறுப்பு கட்சியை தாண்டி மக்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

மேலும், உதயநிதி செல்லும் இடங்களில் ஸ்டாலினுக்கு இணையாக அவருக்கு முக்கியதுவம் அளிக்கப்பட்டு பேனர்கள் வைக்கப்படுகிறது. தனக்கு பேனர் வைக்கவேண்டாம் என்று உதயநிதியை சொன்னாலும் அதை கட்சி நிர்வாகிகள் கேட்க மறுக்கிறார்கள். மேலும் சாலையோரங்களில் ஆக்கிரமித்தும் பாதசாரிகளுக்கு இடைஞ்சலாகவும் ஆங்கங்கே பேனர்கள் வைக்கப் படுகின்றன என்ற தகவலும் முதல்வர் ஸ்டாலினுக்கு சென்றுள்ளது.

இந்நிலையில் தான், டிஜிபி யிடமிருந்து அனைத்து மாவட்ட எஸ்பி களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு மாவட்ட அரசியல் கட்சி பொறுப்பாளரிடமும் இனி பொது இடங்களில் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று சொல்லுங்கள். அப்படி வைத்தால் அது ஆளும் கட்சியாக இருந்தாலும் உடனடியாக அகற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும் என்பதையும் தெரியப்படுத்துங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

அதைத் தொடர்ந்து தான், திமுக தலைமை கழகத்திலிருந்து ஆர்.எஸ்.பாரதி மூலம் பேனர் வைக்கக்கூடாது என்று அறிக்கையும் விடப்பட்டுள்ளது. மேலும் பேனர் வைப்பது திமுக கட்சியினராக இருந்தாலும் பரவாயில்லை, அவர்கள் மேல் நடவடிக்கை எடுங்கள் என்றும் காவல்துறைக்கு ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாக காவல்;துறை வட்டாரத்திலும் பேசப்படுகிறது.