டம்மியாக இருந்தாலும் பயங்கர டேன்ஜராக இருக்கும் பன்னீர் ,.. செய்வதறியாமல் கதிகலங்கி நிற்கும் எடப்பாடி.!

முதல்வர் வேட்பாளராக போட்டி, அதன்பின் எதிர்க்கட்சி தலைவராக போட்டி என தொடர்ந்து எடப்பாடியுடன் போட்டிபோட்டுக் கொண்டிருக்கிறார் பன்னீர் செல்வம். ஆனால் அனைத்திலும் எடப்பாடியே தொடர்ந்து வெற்றிபெற்றுக்கொண்டிருக்கிறார்.

டம்மியாக இருந்தாலும் பயங்கர டேன்ஜராக இருக்கும் பன்னீர் ,.. செய்வதறியாமல் கதிகலங்கி நிற்கும் எடப்பாடி.!

முதல்வர் வேட்பாளராக போட்டி, அதன்பின் எதிர்க்கட்சி தலைவராக போட்டி என தொடர்ந்து எடப்பாடியுடன் போட்டிபோட்டுக் கொண்டிருக்கிறார் பன்னீர் செல்வம். ஆனால் அனைத்திலும் எடப்பாடியே தொடர்ந்து வெற்றிபெற்றுக்கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் சசிகலாவுடன் ஏற்பட்ட மோதலின் போது தன் பின்னே வந்த கட்சி காரர்களுக்கும், எம்.எல்.ஏக்களுக்கும் ஏதும் செய்யவில்லை பன்னீர் செல்வம். தன் மகனை மட்டும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்து விட்டார் பன்னீர் செல்வம்.

ஆனால், இப்போதும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் அவர் தான். இப்போதும் கட்சியின் தலைமை பொறுப்பில் பன்னீர் செல்வம் தான் இருக்கிறார். அதனால் தான் கட்சியில் அவருக்கு ஆதரவு இல்லை என்றாலும் அவரை எடப்பாடி அடிக்கடி சந்தித்து பேசுகிறார். கட்சியில் பன்னீர் செல்வத்தை அலட்சியப்படுத்தினாலும், கூட்டத்துக்கு அவரை அழைக்காமலே இருந்தாலும் அன்று மாலை அவரை சந்தித்து பேசுகிறார் எடப்பாடி.

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. பன்னீர் செல்வத்தை எடப்பாடி முற்றிலும் பகைத்துக்கொண்டால் பன்னீர் செல்வமே சசிகலாவை கட்சியில் இணைத்துக்கொள்வார். அதற்கான முழு உரிமையும் கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் அவருக்கு இருக்கிறது. 

மேலும் பொது குழு கூட்டத்தை நடத்தி அதன் முடிவுகள் வரும் வரை பன்னீர் செல்வத்தை கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து அசைக்க முடியாது. அதற்குள் பன்னீர் செல்வம் ஏதும் அதிரடி முடிவு எடுத்தால் அது எடப்பாடிக்கு பாதிப்பை தான் ஏற்படுத்தும். ஆகவே நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் ரெண்டுங்கெட்டான் நிலைமையில் எடப்பாடி இருக்கிறார்.