சசிகலாவோடு தொடர்பில் இருந்த எம்.எல்.ஏக்களுக்கு பல்க்காக பணம்.! -எடப்பாடியின் மாஸ்டர் மூவ்.! 

சசிகலாவோடு தொடர்பில் இருந்த எம்.எல்.ஏக்களுக்கு பல்க்காக பணம்.! -எடப்பாடியின் மாஸ்டர் மூவ்.! 

எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின் சசிகலா சிறைக்கு சென்றார். அதன்பின் இனி அதிமுக அவ்வளவு தான், கூடிய விரைவில் அழிந்துவிடும் என்று அரசியல் அரங்கில் பேசப்பட்டது. மேலும் இன்னும் சில மாதங்களில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றும் கூறப்பட்டது. ஆனால்,அனைவர் கருத்தையும் பொய்யாக்கும் விதமாக தனது ஆட்சிக்காலத்தை நிறைவுசெய்தார் எடப்பாடி பழனிசாமி.

மேலும் அதைத் தொடர்ந்து வந்த சட்டமன்ற தேர்தலிலும் வலிமையான எதிர்க்கட்சியாக 65 இடங்களில் அதிமுக வெற்றிபெற்றது. இந்த தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இணையாக எடப்பாடி பழனிசாமியும் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து கட்சிக்காக பிரச்சாரம் செய்தார். இது கட்சியினரிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

இதன் காரணமாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும், சசிகலாவிற்கு இருந்த மக்கள் ஆதரவ குறையத்தொடங்கியது. இது எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது. இதன் காரணமாக பெரும்பாலான எம்.எல். ஏக்கள் ஆதரவோடு எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்நிலையில் தான் சசிகலாவின் ஆடியோ வெளியாகி அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.சாதாரண தொண்டர் முதல் முன்னாள் அமைச்சர் வரை சசிகலாவுடன் பேசியதாக கூறப்பட்டது. அதோடு சசிகலா வலையில் 8 எம்.எல்.ஏக்கள் சிக்கியதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. 

இந்நிலையில் அந்த ஆதரவு எம்.எல்.ஏக்களை முழுமையாக தனது ஆதரவாளர்களாக மாற்ற அவர்களுக்கு பொருளாதார ரீதியாக எடப்பாடி பழனிசாமி உதவியதாகவும், அவர்களுக்கு தேவையான உதவிகள் தொடர்ந்து வந்துசேரும் என்றும் உறுதி கூறியதாகவும், இதற்காக சில கோடிகளை எடப்பாடி செலவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏக்கள் எடப்பாடியின் தீவிர ஆதரவாளர்களாக மாறியதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.