தெளிவாக இருக்கும் எடப்பாடி,.. பிளானை மாற்றும் சசிகலா,..இடையில் சிக்கி சின்னாபின்னாமாகும் ஓ.பி.எஸ்.! 

தெளிவாக இருக்கும் எடப்பாடி,.. பிளானை மாற்றும் சசிகலா,..இடையில் சிக்கி சின்னாபின்னாமாகும் ஓ.பி.எஸ்.! 

சமீபகாலமாக திமுக கொரோனாவால் ஏற்பட்ட தாக்கத்தை சரிசெய்து கொண்டிருக்க அதிமுகவோ சசிகலா ஆடியோவால் ஏற்பட்ட தாக்கத்தை சரிசெய்து கொண்டிருக்கிறது. இது சசிகலாவிடம் பேசியவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் அளவு சென்றுள்ளது. ஆனாலும் சசிகலாவின் ஆடியோக்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டு தான் இருக்கிறது. 

இரு நாட்களுக்கு முன் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிமுகவின் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ. பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பதவியை வேண்டாம் வேண்டாம் என்று நெடுநாள் மறுத்த பன்னீர்செல்வத்துக்கு வலுக்கட்டாயமாக இந்த பதவியை எடப்பாடி கொடுத்துள்ளார் என்றே அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டது.  பன்னீர்செல்வம் சசிகலா பக்கம் செல்லாமல் தடுக்கவே எடப்பாடிஇந்த பதவியை கொடுத்துள்ளார் என்றும் கூறப்பட்டது. 

இப்படி பன்னீர்செல்வத்தை தன் பக்கம் வைத்துக்கொள்ள எடப்பாடி போராடிக்கொண்டிருக்க, சசிகலாவும் பன்னீர்செல்வத்தை தனது பக்கம் இழுக்க போராடிக்கொண்டிருக்கிறார் என்பது அவர் வெளியிட்டதாக கூறப்படும் ஆடியோக்கள் மூலம் தெரியவருகிறது. 

சசிகலாவின் 44 வது ஆடியோவாக சிவனேசன் என்ற அதிமுக நிர்வாகியுடன் சசிகலா பேசும் ஆடியோ வெளிவந்தது. அந்த ஆடியோவில் பன்னீர் செல்வம் அவ்வாறு (ராஜினாமா) செய்யாதிருந்திருந்தால் அவரை தான் உட்கார (முதல்வர்) வைத்திருப்பேன். அவராகவே அவ்வாறு செய்துவிட்டார் என்ற சசிகலா, அதிமுக ஒரு பொதுவான கட்சி, ஒரு ஜாதி ரீதியாக செயல்படக் கூடாது எனத் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டின் எந்த இடத்தில் இருந்து தம்மிடம் தொண்டர்கள் பேசினாலும் கட்சியின் மீது ஒரே குறையை கூறுகின்றனர். எல்லா ஜாதிக்காரர்களும் அதையே கூறுகின்றனர். அவர்களை நான் கட்டுப்படுத்தியுள்ளேன் என்று கூறியுள்ளார். 

மேலும், கட்சிக்காக குரல் கொடுத்த புகழேந்தி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது. என்னோட பேசுறாங்க, நீங்க வாங்கம்மானு கூப்பிடுறாங்கன்றதுக்காக கட்சிக்காரவுங்களை கட்சியிலேர்ந்து எடுத்தீங்கன்னா, ஒருத்தர் ரெண்டு பேர் சுயநலத்துக்காக தொண்டர்களை பலிகடா ஆக்குறதா? இது கட்சி நடத்துறவங்களுக்கு அழகா? தொடர்ந்து இந்த கட்சிக்கு விசுவாசமா உழைச்சது தப்பா? எனக்கு பாத்தீங்கன்னா முதுகுல குத்திக் குத்தி இனிமே குத்துறதுக்கு முதுகுல இடமே இல்லை. ஆனா இப்ப தொண்டர்கள் முதுகுலயும் குத்தினா அதை வேடிக்கைப் பாத்துக்கிட்டு இருக்க முடியுமா? கட்சிய காப்பாத்த நான் கண்டிப்பா வருவம்ப்பா. தொண்டர்கள்தான் எனக்கு முக்கியம். நான் வரவேண்டியதுக்கான நேரம் வந்துடுச்சு என்று ஆவேசமாக கூறியிருந்தார். 

இந்த ஆடியோ மூலம் சசிகலாவும் பன்னீர்செல்வத்தை தன் பக்கம் இழுக்க விரும்புகிறார் என்பதும், தனக்கு கட்சி போதும், ஆட்சி அமைந்தால் முதல்வராக பன்னீர்செல்வம் தொடரலாம் என்றும் மறைமுகமாக பன்னீர்செல்வத்துக்கு தூது விடுகிறார் என்றே தெரிகிறது. மேலும் பன்னீர்செல்வம் இல்லாமல் எடப்பாடியை வீழ்த்தி கட்சியை கைப்பற்றுவது மிக கடினம் என்பதை சசிகலா உணர்ந்தே பன்னீருக்கு இப்படி பதவி ஆசை காட்டுகிறார் சசிகலா என அதிமுக வட்டாரத்தில் கூறுகிறார்கள். 

எடப்பாடி, சசிகலா மோதலில் பன்னீர்செல்வம் யார் பக்கம் சொல்லப்போகிறார் என்பதும், ஒருவேளை தவறான பக்கம் தவறான பக்கம் சென்றால் பன்னீரின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்பதே தற்போது அரசியலில் இருக்கும் பெரிய கேள்வி. ஆனால் அதே நேரம் இவ்ர்கள் இருவருக்கும் இடையில் சிக்கி பன்னீர்செல்வம் தான் சின்னாபின்னமாகப் போகிறார் என்று முனுமுனுகிறார்கள் அதிமுகவினர்.