முதலில் விசாரணை, அப்புறம் ஓரங்கட்ட திட்டம்!! மொத்தப்பணத்தையும் சுருட்டிய எச்.ராஜாவுக்கு பெரிய ஆப்பு... 

முதலில் விசாரணை, அப்புறம் ஓரங்கட்ட திட்டம்!! மொத்தப்பணத்தையும் சுருட்டிய எச்.ராஜாவுக்கு பெரிய ஆப்பு... 

பா.ஜ.க முன்னணித் தலைவர்களுள் ஒருவரான எச்.ராஜா, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வி அடைந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்த தோல்விக்கு  எச்.ராஜா தான் காரணம் என்றும், கட்சி அவரிடம் கொடுத்த 12 கோடியில் 4 கோடியை செலவு செய்யாமல் பதுக்கிக்கொண்டார் என்றும் குற்றசாட்டு எழுந்தது. இதனால் காரைக்குடி நகரத் தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு ஒன்றியத் தலைவர் பாலா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் மாவட்டத் தலைவர் செல்வராஜிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து பாஜக மாவட்டத் தலைவர் செல்வராஜ் மாநிலத் தலைமைக்கு தனது ராஜினாமா கடிதத்தையும் அனுப்பி உள்ளார்.

அதோடு எச்.ராஜா மீது காரைக்குடி நகரத் தலைவர் சந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றையும் செல்வராஜ் வைத்துள்ளார். அதில் தேர்தல் செலவுக்காகக் கட்சி மேலிடம் கொடுத்த பெருந்தொகையை, பா.ஜ.க மூத்த தலைவர் எச். ராஜா செலவழிக்காமல் சுருட்டிக்கொண்டார். தேர்தலில் ஜெயிப்பதற்கான எந்த முயற்சியிலும் அவர் ஈடுபடவே இல்லை. பணத்தைச் சுருட்டிவிட்டு இப்போது தொண்டர்கள் மீது பழியைப் போடுகிறார். இப்போது சுப்பிரமணியபுரத்தில் 4கோடி ரூபாய் மதிப்பில் எச்.ராஜா வீடு கட்டிக் கொண்டிருக்கிறார் என குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக விசாரணை செய்யப்படும் என்றும் பாஜக தலைவர் எல்.முருகன் கூறியிருந்தார். 

இந்நிலையில் தமிழக பா.ஜ.க வேட்பாளர்களுக்குத் தேர்தல் செலவுகளுக்காகக் கொடுத்த பல கோடி பணத்தைச் சிலர் செலவழிக்காமல் பதுக்கிக்கொண்ட தகவல் டெல்லி பாஜக தலைமை வரை வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த டெல்லி தலைமை விரைவிலேயே அதிரடி நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்று கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் 15 மாவட்ட தலைவர்களை மாற்றி கட்சியை முழுவதுமாக சீரமைக்கவும் முடிவெடுக்கப் பட்டுள்ளதாகவும், இந்த சீரமைப்பில் சில சீனியர்கள் தலைவர்கள் ஓரங்கட்டப்படலாம் என்றும் பாஜக தரப்பில் கூறப்படுகிறது.