ஆட்டோ ஓட்டுநர் முதல் முதலமைச்சர் வரை...யார் இந்த ஏக்நாத் ஷிண்டே!

ஆட்டோ ஓட்டுநர் முதல் முதலமைச்சர் வரை...யார் இந்த ஏக்நாத் ஷிண்டே!

மும்பையை ஒட்டியுள்ள தானே நகரில் ஆட்டோ ஓட்டுநராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, அரசியலுக்கு வந்த பிறகு தானே-பால்கர் பகுதியில் வெகுசீக்கிரத்தில் ஒரு முக்கிய சிவசேனா தலைவராக உருவெடுத்தார், மேலும் பொது நலன் சார்ந்த பிரச்சினைகளில் தனது தீவிரமான அணுகுமுறையால் பெயர் பெற்றவர்.

ஏக்நாத் ஷிண்டேவின் வாழ்க்கைக் குறிப்பை சுருக்கமாக பார்ப்போம்.

09.02.1964 : ஏக்நாத ஷிண்டே மகாரஷ்டிரா மாநிலத்தில் உள்ள சதாரா   மாவட்டம் ஜவாலி என்னும் ஊரில் பிறந்தார்.

1980: பால் தாக்கரே கருத்துகளால் ஈர்க்கப்பட்டு சிவசேனாவில் இணைந்தார்.

1997: சிவசேனா சார்பாக தானே மாநகராட்சிக்கு முதல் முறையாக மாநகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

2001 : தானே மாநகராட்சியின் அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2002 : தானே மாநகராட்சிக்கு இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்

2004 : முதல் முறையாக மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

2005 : சிவசேனாவின் தானே மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டார். இக்கட்சியில் இப்படிப்பட்ட முக்கிய பதவியில் நியமிக்கப்பட்ட முதல் எம்.எல்.ஏ இவர் ஆவார்.

2009 : இரண்டாவது முறையாக மகாராஷ்டிர சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்

2014 : 3வது முறையாக மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்

அக்டோபர் 2014 - டிசம்பர் 2014: மகாராஷ்டிர சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்

2014 - 2019: மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2019 : சிவசேனா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார்

2019: மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்தில் கூடுதல் பொறுப்பாக பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்

2019 : தொடர்ந்து நான்காவது முறையாக மகாராஷ்டிர சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்

28 நவம்பர் 2019: மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணியின் கூட்டணி ஆட்சியில் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார்.

2019: நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்

2019: 28 நவம்பர் 2019 - 30 டிசம்பர் 2019 வரை உள்துறை அமைச்சராகவும் செயல்பட்டார்.

பாரதிய ஜனதா கட்சியின் தூண்டுதலில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் முரண்பட்டார். பெரும்பான்மையான சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களை தம் பக்கம் கொண்டுவந்த ஷிண்டே பா.ஜ.க துணையுடன் இன்று முதல்வராக பொறுப்பேற்கிறார்.