இபிஎஸ் பேசுனத கேட்டீங்களா? இணைப்புக்கு வாய்ப்பே இல்ல ராஜா...! இபிஎஸ் அடுக்கும் காரணங்கள் என்ன?

இபிஎஸ் பேசுனத கேட்டீங்களா? இணைப்புக்கு வாய்ப்பே இல்ல ராஜா...! இபிஎஸ் அடுக்கும் காரணங்கள் என்ன?

அனைவரும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என ஓபிஎஸ் அழைப்பு விடுத்ததற்கு மறுப்பு தெரிவித்து பல காரணங்களை இபிஎஸ் முன்வைத்துள்ள காரணங்கள் அதிமுக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கு:

ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதிமுக ஜூன் 23 க்கு முன்பு இருந்ததை போலவே செயல்படும் என தீர்பளித்ததால், மீண்டும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரானார் பன்னீர்செல்வம். இது இபிஎஸ்க்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

அன்பு சகோதரருக்கு அழைப்பு:

செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்,  நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், எல்லாவற்றையும் மறந்து அனைவரும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளதோடு, இபிஎஸ்ஸை அன்பு சகோதரன் எனக் குறிப்பிட்டு சேர்ந்து செயல்பட அழைப்பு விடுத்தார்.

மேலும் படிக்க: அதிமுக ஒபிஸ்க்கு... அதிமுக அலுவலக சாவி யாருக்கு? 2 ஆப்ஷன்கள்..!

சின்னம்மா, டி.டி.வி.க்கு அழைப்பு:

அனைவரும் இணைந்து செய்லபட வேண்டும் என்பது மட்டுமே எங்கள் எண்ணம், யாராக இருந்தாலும் கட்சி விதிகளை ஏற்றால் சேர்த்துக்கொள்ள படுவார்கள் எனக் கூறியுள்ளார், மேலும், இதில் சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் அடங்குவர். அவர்கள் எங்களுடன் வர வேண்டும் எனபதும் இல்லை, நங்கள் செல்ல வேண்டும் எனபதும் இல்லை, இணைந்து செயல்பட வேண்டும் என அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார் ஒபிஸ்

நிராகரித்த இபிஎஸ்:

அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து இரு நீதிபதி கொண்ட அமர்வுக்கு மேல்முறையீடு செய்துள்ள எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்த போது, ஓபிஎஸ் அழைப்பை நிராகரிப்பதாகவும், அதற்கு காரணங்களாக பல காரசார கருத்துக்களை முன்வைத்துள்ளார். 

பதவிக்காக அழைப்பு:

பதவி வேண்டும் என்பதற்காக அழைப்பு விடுக்கிறார் ஓபிஎஸ்.யாருக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தினாரோ அவரையே கூட்டணிக்கு அழைக்கிறார். பதவிக்காக எதை வேண்டுமென்றாலும் செய்வார் ஓபிஎஸ் என இபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார். 

அதிமுக எப்படி இணைய முடியும்?:

அதிமுக பொதுக்குழுவிற்கு வர வேண்டும் என ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இருக்கை அமைக்கப்பட்டது. பொதுக்குழுவுக்கு வராமல் ஏன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார் ஓபிஎஸ். ரவுடிகளை வைத்து அறைகளை உடைக்கிறார். அநாகரீகமாக நடந்து கொள்ளும் ஓபிஎஸ் உடன் எப்படி ஒற்றுமையாக செயல்பட முடியும். பொதுக்குழ் உறுப்பினர்கள் என்னை முதலமைச்சராக ஏற்றார்கள், ஆனால்,  15 நாட்களாக என்னை முதலமைச்சராக ஏற்க மறுக்கிறார். இப்படியெல்லாம் நடக்கும் ஓபிஎஸ் உடன் எப்படி இணைந்து செயல்பட முடியும்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அம்மாவின் விசுவாசி நான்:

நான் சொந்த காலில் நின்று தான் படிப்படியாக பொறுப்புகளைப் பெற்றேன். எந்த பதவிக்காகவும் நான் செயல்படவில்லை. ஆனால், எப்போது ஓபிஎஸ் அம்மாவுக்கு விசுவாசமாக இருந்தார். 1989ல் அம்மாவுக்கு எதிராக தேர்தல் பணியாற்றிவர் ஓபிஎஸ். நான் அம்மாவின் சேவல் சின்னத்தில் போட்டியிட்டேன். 

மேலும் படிக்க:  இபிஎஸ் எடுத்த முடிவு..! இது எதிர்பார்க்கப்பட்ட முடிவு தான்..!

திமுகவுடன் உறவு:

திமுக உடன் ஓபிஎஸ் உறவு வைத்துள்ளார். ஓபிஎஸ் மகன் ஓபி.ரவீந்திரநாத் திமுகவை ஆதரித்து பேசுகிறார். இவர்களின் நடவடிக்கை அதிமுக தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்துகிறது.

பொதுக்குழுவில் சந்திக்க தயாரா?

பொதுக்குழுவுக்கு வாருங்கள் என ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அதிமுகவில் பொதுக்குழு தான் உச்சபட்ச அதிகாரம் படைத்தது. நீதிமன்றமும் அதைத்தான் அழுத்தமாக வலியுறுத்தி உள்ளது. அங்கு வந்து ஓபிஎஸ் தனது கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என, ஓபிஎஸ் அழைப்பை நிராகரிப்பதற்கான காரணங்களை அடுக்கியுள்ளார் இபிஎஸ்.

அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை ஓபிஎஸ் நிராகரித்து இருக்கும் நிலையில், சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓபிஎஸ் இணைந்து செயல்படுவார்களா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.