சோழர்கள் தமிழர்களா? இல்லை தெலுங்கர்களா?

சோழர்கள் தமிழகத்தின் தனது தலைநகர் கொண்டிருந்தாலும் அவர்கள் உண்மையில் தமிழ்ர்கள் தானா? என்பதை பார்க்கலாம்!!!

சோழர்கள் தமிழர்களா? இல்லை தெலுங்கர்களா?

சோழர்கள் பற்றி தற்போது பெரும் கவனம் உருவாகி இருக்கும் பட்சத்தில், சோழர்கள் தமிழர்களா இல்லையா என்பதே பெரும் சர்ச்சையாக தற்போது பார்க்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாநகரத்தை தலைநகராகக் கொண்ட சோழர்கள் உண்மையிலேயே தமிழர்கள் தானா என்பது இந்த கட்டுரையில் தெளிவாகும்.

கி.மு. 300ம் நூற்றாண்டில் துவங்கிய சோழர்கள் மறு எழுச்சி, அவர்களது 600 வருட அமைதி அடிமைத் தனத்திற்கு ஒரு மாபெரும் பரிசாக அமைந்தது. பல்லவர்கள் மற்றும் பாண்டியர்கள் ஆளுமையை எதிர்த்து ஒரு மாபெரும் போர் தொடுத்த விஜயாலய சோழன், சோழர்களுக்கு பெரும் ராஜ்ஜியத்தை உருவாக்கத் துவங்கினார். புலிச்சின்னம் கொண்ட சோழர்கள், சரியான காலம் பார்த்து பெரிதாக பாய்ந்து, மீன்களை (பாண்டியர்கள்) வேட்டையாடினர் என்றே சொல்லலாம்.

மேலும் படிக்க | அருண்மொழிவர்மன் எப்படி பொன்னியின் செல்வன் ஆனார் தெரியுமா?

பல பெரும் யுத்தங்கள் தொடுத்து தெற்காசியாவின் பல பகுதிகளை தன் வயப்படுத்திய சோழர்கள் பல கோவில்களையும் பல மாளிகைகளையும் கட்டி, தங்களது ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்திக் கொண்டே வந்தனர். குறிப்பாக, தென்சீனா, இந்தோனேசியா, ஜப்பான், கொரிய பகுதிகள் என பல தெற்காசிய நாடுகளை சோழர்கள் ஆட்சி செய்து வந்ததற்கான வரலாற்று சான்றுகள் உள்ளன.

சோழர்கள் தமிழர்களா? | Tamil and Vedas

வாரிசு வகையில் சாம்ராஜ்ஜியத்தை அடுத்த தலைமுறைக்கு கொடுத்து வந்த சோழர்களில் ஒரு சில அரசர்கள் அதிர்ஷ்டம் இல்லாதவராயினர். ஆண் வாரிசு இல்லாத நிலையில், தங்களது சகோதரர்களுக்கு அரியணையை விட்டுக் கொடுத்து துறவியாகி இருந்த நிலையில், அரியணை பெற்ற முதல் பெரும் அரசர் சுந்தர சோழர். அவரது மகன் தான் ராஜராஜ சோழன்.

பின், அவரை அடுத்து ராஜேந்திர சோழன் அரியணை அலங்கரித்த பின், அவரது தங்கை குந்தவை தேவி (இரண்டாம் குந்தவை)-க்கு மாப்பிள்ளை தேடும் பணியில் ஈடுபட்டார் ராஜேந்திர சோழன். சரியாக இப்போது தான், அதாவது 1010களில் ஒரு புதிய சோழர் குலம் தோன்றியது. அதுதான், ‘தெலுங்கு சோழர்’ அல்லது, ‘சாலுக்கிய சோழர்’.

மேலும் படிக்க |  #1 ட்ரெண்டிங்!!! 5 மில்லியன் பார்வையாளர்கள் எட்டிய பிரம்மாண்ட படைப்பு!!!

பல்லவர்களை வீழ்த்தி ஆட்சியை மீண்டும் பெற்ற சோழர்கள், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு வட தமிழகத்தை ஆண்டு வந்தனர். இன்றைய வடக்கு தமிழக மாவட்டங்களும், ஆந்திரா மற்றும் தெலங்கனா பகுதிகளையும் ஆண்டு வந்த சோழர்களுக்கு, பல ஆண்டுகளுக்குப் பிறகு சாலுக்கிய இனத்தோடும், பல்லவர்களுடனும் நட்பு ஏற்பட்டது.

சோழர் - தமிழ் விக்கிப்பீடியா

அப்படி, கலிங்க ராஜ்ஜியங்களை ஆண்டு வந்த அப்போதைய சாலுக்கிய மன்னரான, விமலாதித்தர் என்பவரை, குந்தவை தேவிக்கு திருமணம் செய்து வைத்தார் ராஜேந்திர சோழன். சோழ நாட்டு புதிய மருமகன் விமலாதித்தர் கீழைச் சாலுக்கியர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயராமின் கதாபாத்திரம் இது தானா...?

ராஜேந்திர சோழனுக்கு வானவன் மாதேவி என அழைக்கப்படும் திரிபுவனா, முக்கோகிலன், பஞ்சவன் மாதேவி மற்றும் வீரமாதேவி என பல ராணியர் இருந்தனர். மொத்தம் அவருக்கு 7 மகன்களும், அருள்மொழி நங்கையார் பிரனார் மற்றும் அம்மங்காதேவி என 2 மகள்களும் இருந்ததாக தெரியப்பட்ட வரலாறு குறிப்பிடுகிறது. ராஜராஜன் மற்றும் ராஜாதி ராஜன் ஆகிய அவரது இரண்டு மகன்களும் சி்று வயதிலேயே இறந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, சோழர்களில் சரியான தலைவர் இல்லை என்ற செய்தி, எதிரி நாட்டு ராஜ்ஜியமான பாண்டியர்களுக்கு தெரிய வந்ததை அடுத்து, ராஜேந்திர சோழனின் மகள் அம்மங்காதேவியை, குந்தவை தேவியின் மகன் இராஜராஜ நரேந்திரருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

ராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியாவை, கீழை நாடுகளை வென்ற தமிழ்  மன்னன் #தமிழர்_பெருமை - BBC News தமிழ்

அவர்களுக்கு பிறந்தவர் தான், முதலாம் குலோத்துங்கச் சோழர். இவரே, சாலுக்கிய மற்றும் சோழ அரசின் முதல் கலவை இளவரசர். அதாவது தெலுங்கு தந்தை வழி கொண்டிருந்தாலும், குடி, தமிழ் குடிதான். தனது காலத்தில், சோழ அரசவையை காக்கவும், ஆளவும் சோழர்களில் வாரிசு இல்லாததை உணர்ந்த சாலுக்கிய இளவரசர் முதலாம் குலோத்துங்கன், சோழ அரியணையை கைப்பற்றினார். அப்படித்தான் சாலுக்கியமும் சோழமும் இணைந்தது.

இதனைத் தொடர்ந்து வந்த அரசர்கள் அனைவருமே தெலுங்கு தந்தை வழி கொண்டு சாலுக்கிய தந்தை வழி கொண்டவர்களாகவே இருந்தனர். இதனால், சோழர்கள் தெலுங்கு மொழி அதிகமாக பேசத் துவங்கினர். இதனால் தான் அவர்கள் தெலுங்கர்கள் ஆனார்கள்.

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் படம் பாருங்கள்.. ஆனந்த் மஹிந்திராவுக்கு லைகா நிறுவனம் வேண்டுகோள்.. எதற்காக?

இதனையே, பிரபல தமிழ் படமான, 2010ம் ஆண்டு வெளியான, ஆயிரத்தில் ஒருவன் படத்தில், அனிதா பாண்டியன் எனும் பாண்டிய இளவரசியாக நடித்திருக்கும் ரீமா சென், சோழ அரசரான பார்த்திபனிடம் கேட்பார்:

தெலுங்கிலேயே பாடிக் கொண்டிருந்த ரீமா சென்னுக்கு, தமிழ் தெரியாதோ என சோழர் பார்த்திபன் கேட்டதற்கு,

“தூய தமிழர் அல்லாத சோழரான பார்த்திபனுக்கு, தமிழின் மிக அடிப்படை இலக்கியங்களான, பரணி (ஆயிரம் யானைகளை வென்ற மிகச்சிறந்த அரசரின் வெற்றியைப் பாடும் இலக்கியம்), கலம்பகம் (பல வகையான கவிதைகளை பூக்கொடி போல கலந்து கட்டப்பட்ட இலக்கியம்), உலா (அழகு இளவரசர் மக்கள் மத்தியில் யானையில் வலம் வருவதை விவரிக்கும் இலக்கியம்) ஆகியவற்றை பாட முடியுமா? அல்லது தெரியவாவது தெரியுமா? என கேட்பார். அதிலும் மேலாக, பார்த்திபனை அசிங்கப்படுத்தும் நோக்கத்துடன், “ஈரு கெட்ட எதிர்மறை பெயரச்சம் ஆவது அறிவீறா? என கேட்பார். அதாவது, தமிழ் அறிந்தவர்கள் குறைந்தது தவறான உடைந்த தமிழிலாவது பேசுவார்கள். அதில், முடியாத எச்சமாக இருக்கும் தமிழ் வார்த்தைகளாவது அறிவீர்களா?”

என, அவரை அவமானப்படுத்துவார். இந்த படத்தில், மூன்றாம் ராஜேந்திர சோழரின் புத்திரனான மெய்ஞானந்த சிவபாத சேகர சோழராக பார்த்திபன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | உலகம் முழுவதும் வெளியான பொன்னியின் செல்வன்.. விழாக் கோலம் பூண்ட திரையரங்குகள்..!

Thaai Thindra Mannae (From

தற்போது சோழர்களின் பெருமையைக் கூறும் படமாக, கல்கியின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதலாம் பாகம் வெளியானதைத் தொடர்ந்து, சோழர்கள், பாண்டியர்கள் எனவும், இந்துக்கள் குறித்தும், இனங்களின் பிற்குறிப்புகள் பற்றியும் பல வகையான சர்ச்சை பேச்சுகள் தற்போது பெரிதாகப் பார்க்கப்படுவதை அடுத்து, இந்த கருத்து குறித்த சிறிய விளக்கம் இந்த கட்டுரை அளிக்கிறது என்பதில் மகிழ்ச்சி !

மேலும் படிக்க | தயவு செய்து இப்படி விளம்பர படுத்தாதீர்கள்!- படக்குழுவிற்கு வழக்கறிஞர்கள் கோரிக்கை!

--- பூஜா ராமகிருஷ்ணன்