குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக பேசிய மீரா மிதுன்..! கம்பி எண்ண நேரம் வந்து விட்டதாக மக்கள் ஆவேசம்..!

மீரா மிதுனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக பேசிய மீரா மிதுன்..! கம்பி எண்ண நேரம் வந்து விட்டதாக மக்கள் ஆவேசம்..!

சமூக வலைத்தளம் என்பது நமக்கெல்லாம் கிடைத்த வரப்பிரசாதம் என்று சொன்ன காலம் போய் தற்போது நமக்கு கிடைத்த சாபக் கேடு என்று சொல்லும் அளவு வளர்ந்திருக்கிறது. இதன் மூலம் பல நல்ல விஷயங்கள் பரவுவதை விட, நல்ல மனிதர்களின் நல்ல நல்ல திறமைகள், தகவல்கள், படிப்பு கிடைப்பதை காட்டிலும், பாலியல் தொழிலை வளர்ப்பது, சாதி சண்டையை ஏற்படுத்துவது, எப்படியேனும் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடவேண்டும் என ஆபாச வார்த்தைகளை பேசுவது, ஆபாச வீடியோக்களை போடுவது என குப்பைக் கிடங்காக மாறியிருக்கிறது சமூக வலைத்தளம் என்று சொன்னால் அது மிகையாகாது. 

கடந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஒட்டுமொத்த மக்களும் வீட்டுக்குள் முடங்கியப் போது அனைவரின் பொழுதுபோக்கு அம்சமாக மாறியது செல்போனும், சமூக வலைதளங்களும் தான். அதிலும் டிக்டாக் என்ற செயலி மூலம் பலரும் தங்களது நடிப்பு திறமையை வெளிக் கொணர்ந்தனர். இருப்பினும் இந்த செயலி மூலம் மிகவும் பிரபலமடைந்தவர்கள் தான் ரவுடி பேபி, இலக்கியா, சூர்யா, ஜி.பி.முத்து, திருச்சி சாதனா, சூர்யா தேவி போன்றோர். இவர்களது வேலையே மற்றவர்களை இழிவாக பேசுவது, ஒருவரை ஒருவர் மானாவாரியாக திட்டிக் கொள்வது மட்டுமல்லாது அங்கங்கள் தெரிய இரட்டை வசன பட வசனங்கள் மற்றும் பாடல்களுக்கு கில்மாவாக நடனமாடுவது போன்றவை தான். 

மக்கள் மத்தியில் பிரபலம் அடைய வேண்டும், சினிமா வாய்ப்பிற்காக இவ்வாறு செய்வதாக வெளிப்படையாகவே கூறும் இத்தகைய செல்வங்கள், டிக்டாக் செயலியை இந்தியா தடை செய்ததும், அடங்கி விடுவார்கள் என நினைத்த போது, யூடியூபில் விஸ்வரூபமாக அவதாரம் எடுத்தனர். 30 நொடிகள், 1நிமிடங்கள் மட்டுமே இருந்து வந்த இவர்களது வீடியோ தற்போது எத்தனை மணி நேரமானாலும் போடலாம் என்றால் வலிக்குமா என்ன? யார் இவர்கள் என்ன வேண்டும் இவர்களுக்கு என்பதை ஒருவர் பின் ஒருவராக பார்க்கலாம்.

முதலாவதாக எப்போதுமே டிரெண்டிங்கில் இருக்கும் ரவுடி பேபி சூர்யா திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயானவர். சுப்புலட்சுமி என்னும் இயற்பெயரை கொண்ட சூர்யா, கணவரை பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறார். டிக்டாக்கில் எல்லோரையும் போலவே பியூட்டி டிப்ஸ் கொடுப்பது, நடனமாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவர் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஆபாச இரட்டை அர்த்தம் கொண்ட பாடல்களுக்கு நடனமாடுவது என தனது திறமையை எல்லை மீறி காண்பிக்க ஆரம்பித்தார். மேலும் தனது வீடியோக்களுக்கு நெகட்டிவ்வாக கமெண்ட் அடிப்பவர்களை வீடியோவிலேயே தோலுரித்து காட்டமான வீடியோகளையும் வெளியிட்டு வந்தவர். கடந்தாண்டு திருச்சியில் மசாஜ் மையங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டவர். இவர் பாலியல் தொழிலில் தான் உள்ளார் என்பதை சமீபத்தில் இவர் இலக்கியாவை தொழிலுக்கு அழைத்த ஆடியோ அம்பலமாக்கியது. 

அடுத்ததாக இலக்கியா. சினிமாவில் சாதிக்க வேண்டி சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வந்தவர். பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என பலரிடமும் ஏமாந்து தன்னந்தனியாக நின்றவர், பிறகு செய்வதறியாது மும்பையில் பார்களில் நடனமாடி பிழைப்பு நடத்தி வந்தார். பிறகு டிக்டாக்கில் தனது அதிகபட்ச கவர்ச்சி நடனத்தை அரங்கேற்ற ஆரம்பித்தார். இரட்டை அர்த்த வசனங்கள், பாடல்கள் என அரைகுறை ஆடைகளுடன் அங்கங்களை அப்பட்டமாக தெரியும் படி வீடியோக்களை வெளியிட்டார். இதன் மூலம் இரண்டு பட வாய்ப்புகளையும் பெற்றார் இலக்கியா. இவர் சென்னையில் ஒரு நபரிடம் இரண்டு மணிநேரம் இருக்க லட்ச ரூபாய் வாங்குவதாகவும், சிங்கப்பூரில் இரண்டு மாதங்கள் இருக்க வேண்டும் என்றால் கிட்டத்தட்ட ரூ.6லட்சம் கேட்பேன் என, சூர்யாவிடம் இவர் நடத்திய உரையாடல் அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. 

வெறும் லேடிஸ் மட்டும் தானா என்று பார்த்தால், இருக்கவே இருக்காரு ஜி.பி.முத்து. தூத்துக்குடியில் ஒரு சிறிய கிராமத்தில் தச்சராக பணியாற்றி வந்தவர், ஆரம்பத்தில் ஒரு பொழுதுபோக்குக்காக டிக்டாக்கை ஆரம்பித்தார். பிறகு அவரது அன்றாட விஷயங்கள் அனைத்துமே டிக்டாக்கில் வெளிகாட்டினார். ரவுடி பேபி சூர்யாவுடன் இணைந்து இவர் அடித்த லூட்டிக்கு அளவே இல்லை. தனக்கே உண்டான பாஷையிலும், வெகுளித்தனத்தாலும் பலரின் மனதை கவர்ந்தவரால், பணத்தை சம்பாதிக்க முடியவில்லை. கடந்தாண்டு பாதியில் தற்கொலைக்கு முயன்றார். இருப்பினும் அதிலிருந்து வெளியே வந்தவர், டிக்டாக்கிற்கு பிறகு யூடியூபில் கலக்க ஆரம்பித்தார். சேனல் ஆரம்பித்த 4 மாதங்களில் 7 லட்சம் பேரை பின்தொடர வைத்தவர் பிறகு சிறுது காலத்திலேயே கார் வாங்கி அசத்தினார். இருப்பினும் யூடியூபில் ஆபாச வார்த்தைகளால் மற்றவர்களை வசைப்பாடுவது அனைவரது முகத்தை சுளிக்க வைக்கிறது. 

சென்னை முகப்பேரில் H2O டாட்டூ ஸ்டுடியோ வைத்துள்ள ராஜேஷ், ஆரம்பத்தில் தனது தொழிலுக்கு விளம்பரம் தேடும் முயற்சியில், டாட்டூ போடுவதை வீடியோ பதிவு செய்து யூடியூபில் பதிவேற்றி வந்த நிலையில், பிற்காலத்தில் அதிக வியூவ்ஸ் மற்றும் பணத்திற்காக இளம்பெண்களின் அந்தரங்கப் பகுதிகளை, யூடியூபில் வெளிச்சம் போட்டு காட்டி அதன்மூலம் காசு பார்த்து வருகிறான். 

மேலும், டாட்டூ போட வரும் பெண்களிடம் ஆபாசமாக பேசுவது, இரட்டை அர்த்த காமெடிகள் செய்வது என தனது சேட்டையை தொடர்ந்து வரும் ராஜேஷுக்கு தோதாக, அவனது ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் வைக்கும் கேமரா கோணங்களை எல்லாம் என்னவென்ற சொல்ல..? கண்ணால் பார்க்க முடியாத அந்த வீடியோக்களை அருவருப்பூட்டும் கமெண்டுகளுடன் எடிட்டிங் செய்து பதிவேற்றி வருகிறார்கள் இந்த கூட்டுக் களவாணிகள். இதனால் பதறிபோன பெண்களும், நெட்டிசன்களும் இவரையும், பப்ஜி மதனை போன்றே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இப்படி மற்றவரை திட்டியே புகழந்தவர்கள் லிஸ்ட்டில் சூர்யா தேவி, திருச்சி சாதனா, மீராமிதுன் என பலரும் உள்ளனர். மீரா மிதுன் இவரை பற்றி பேச மறக்க முடியுமா என்ன? தமிழ் செல்வி என்ற இயற்பெயர் கொண்ட அவர், மாடலிங்க் நடிப்பு என அங்கு அங்கு தெரிந்தார். எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர், 2019-ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பிரபலமானார். ஏற்கனவே அதே தனியார் தொலைக்காட்சியில் நடந்த நடன போட்டியின் போது, தன்னோடு ஆடிய நபர் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர், அதே பாணியை ரியாலிட்டி ஷோவிலும் வெளிப்படுத்தினார். 

பிறகு ஷோவில் இருந்து வெளியே வந்தவருக்கும், மாடலிங்கில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை நடத்தி வந்த ஜோ மைக்கேல்லுக்கும் இடையே நடந்த வாக்குவாதமும், போராட்டமும் சமூக வலைதளங்களையே கட்டி வைத்தது. தனது நிறுவனத்தை மீராமிதுன் சட்டவிரோதமாக  பயன்படுத்தியதாகவும், மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டனர். இதன் பின்னர் வட மாநிலக்களுக்கு சென்று தலைமறைவான மீராமிதுன், பல்வேறு சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டு பலரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டார். திரையுலகிலேயே நான் மட்டும் தான் மிகவும் கொண்டாடப்பட வேண்டியவள், மற்ற எந்த ஒரு நடிகருக்கும் இங்கு நடிக்கவே தெரியாது என, சூர்யா, விஜய் போன்ற பெரிய நடிகர்களை தாக்கத் துவங்கினார் மீரா மிதுன். 

பிறகு நடிகைகள் பலரும் தன் முகத்தை போன்றே அவர்களது முகத்தையும் மாற்றிக் கொள்வதாகவும், தன்னுடைய ஸ்டைல் உட்பட அனைத்தையும் காப்பி அடிப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அனைவரிடத்திலும் வாங்கிக் கட்டிக் கொண்டார். பிறகு ஒரு சிறுவனுடன் சேர்ந்து பெட்டில் இருந்து எழுவது முதல், சாப்பிடுவது, சுற்றுவது, டாட்டூ போடுவது என அனைத்தையுமே சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். அந்த வரிசையில், தற்போது சினிமாவில் குறிப்பிட்ட சமூகத்தினரை தாக்கியுள்ளார் மீரா மிதுன். சினிமா துறையில் பட்டியலினத்தவர்கள் இருப்பதால் தான் மோசமாக இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் நிச்சயம் கிரிமினலாக இருப்பார்கள் எனவும் கண்டமேனிக்கு பேசியிருந்தார் மீரா மிதுன். இதனால் ஆவேசமடைந்த பலரும் காவல்நிலையங்களில் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி புகார்கள் அளித்த வண்ணம் இருக்க, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 7 பிரிவுகளின் கீழ் மீராமிதுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வெளிப்படையாகவே தொழிலுக்கு அழைக்கும் ரவுடி பேபி சூர்யா. ஜாதி வெறியை தூண்டும் விதமாக குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக பேசி வீடியோ வெளியிடும் ஆபாச நடிகை மீராமிதுன்.கெட்ட வார்த்தைகளை பேசி காசு பணம் சம்பாதித்து கார், பங்களா வாங்கும் ஜிபி.முத்து. இவர்களைப் போல பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசியும், திட்டியும் ஊருடுருவும் சூர்யாதேவி, திருச்சி சாதனா, பப்ஜி மதன் போன்ற சைகோ கும்பல்கள் மீது சரியான நடவடிக்கை பாயுமா என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் குமுறி வருகின்றனர். சமூக வலத்தளங்களில் எப்படியாவது பேசி, எதயாவது செய்து பிரபலமடைய வேண்டும் என்பது தான் இவர்களது குறிக்கோள். நாட்டில் பல்வேறு பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் வேலை, வருமானம் இன்றி மக்கள் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் இந்த சூழலில் பப்லிசிட்டி மற்றும் பணத்திற்காக இவ்வாறு நடந்து கொள்பவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கை தான், பின்னாளில் இவர்களை போல பிறரை வளர்க்காது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.