750 ஜோடி காலணிகள்.. 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேலைகள்..! ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கோரிய வழக்கு விசாரணை..!

750 ஜோடி காலணிகள்.. 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேலைகள்..! ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கோரிய வழக்கு விசாரணை..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பொருட்களை ஏலம் விடக்கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில்  விசாரணை.

1996 ஜூன் 14: 

கடந்த 1991 - 1996 வரை ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்து குவித்ததாக சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அப்போதைய ஜனதா கட்சித் தலைவராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்தார்.

சொத்து குவிப்பு வழக்கு: கடந்து வந்த பாதை | சொத்து குவிப்பு வழக்கு: கடந்து  வந்த பாதை - hindutamil.in

சொத்து குவிப்பு வழக்கு:

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலித, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 மீதும் சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு தனி நீதிமன்றம் 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த போது, தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு:

இந்த தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தனி நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பின்போது ஜெயலலிதா மரணமடைந்து இருந்தார். இதனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேர் மட்டும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 3 பேரும் சிறை தண்டனையை நிறைவு செய்த நிலையில் விடுதலையாகி உள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கு News in Tamil, Latest சொத்து குவிப்பு வழக்கு news,  photos, videos | Zee News Tamil

இதையும் படிக்க: தொண்டர்களை கன்னத்தில் அறைந்த கே.எஸ்.அழகிரி..! ரணகளமான சத்தியமூர்த்தி பவன்..!

பெங்களூரு கருவூலம்:

பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர், நரசிம்ம மூர்த்தி சார்பில் உச்சநீதிமன்றத்துக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதில், ‛‛கருவூலத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. இதில் 11,344 விலை உயர்ந்த சேலைகள், 750 ஜோடி காலணிகள் நீண்ட நாட்களாக அப்படியே உள்ளது. இதனால் அதன் நிறம் மங்கி விடும். லெதர் காலணியாக இருந்தாலும் அதன் தரம் குறையும். இதனால் இந்த பொருட்களை ஏலம் விட்டு அந்த பணத்தை கருவூலத்தில் சேர்க்க வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.

அடேங்கப்பா..ஜெ.சொத்து குவிப்பு வழக்கு செலவு இவ்வளவா? கர்நாடக அரசு வெளியிட்ட  பகீர் தகவல்….

இன்று விசாரணை:

தனது கடிதம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்  மத்திய தகவல் ஆணையத்தில் விபரங்கள் கேட்டு இருந்தார் நரசிம்ம மூர்த்தி. ஆனால் மத்திய தகவல் ஆணையம் விபரங்கள் எதையும் அளிக்கவில்லை. இதனால் தனக்கு உரிய தகவலை வழங்கும்படி மத்திய தகவல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்துக்கு மீண்டும் அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதன் மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடக்கவுள்ளது.