கமிஷன் கேட்டு மிரட்டிய ஆர்.பாலு... ஸ்டாலினுக்கு வந்த போன் கால்... இறங்கிய உளவுத்துறை!! முரசொலிக்கு முன்பே கலைஞர் டிவியில் வந்த ஆப்பு... 

கமிஷன் கேட்டு மிரட்டிய ஆர்.பாலு... ஸ்டாலினுக்கு வந்த போன் கால்... இறங்கிய உளவுத்துறை!! முரசொலிக்கு முன்பே கலைஞர் டிவியில் வந்த ஆப்பு... 

சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் ஆர்.பாலு. இவர் திமுக தென்மேற்கு மாவட்டம் கிழக்கு மயிலாப்பூர் பிரநிதியாக இருக்கிறார். சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்தபின் மைலாப்பூர் பகுதியில் நடந்த தனியார் கட்டுமான  நிறுவனத்தில்  தலையிட்டதாக திமுக தலைமைக்கு புகார் சென்றது. 

திமுக ஆட்சிக்கு வந்ததும் அம்மா உணவகத்தில் இருந்த ஜெயலலிதா புகைப்படத்தை திமுக பிரமுகர்கள் சிலர் அப்புறப்படுத்தினார்கள். இந்த வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

 அதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட நபர்களை கட்சியில் இருந்து நீக்கியது திமுக. அப்போதே இது போன்று கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைமை அறிவித்தது. 

அதன்படி தற்போது மைலாப்பூர் பகுதியில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக ஆர்.பாலுவை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக திமுகவின் பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

இந்நிலையில், தற்போது ஆர்.பாலுவை கட்சியில் இருந்து நீக்கியதன் முழு பின்னணி வெளிவந்துள்ளது.  மைலாப்பூர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மாவட்ட பிரதிநிதி ஆர்.பாலு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிறது. மேலும் உதயநிதி, அருள்நிதி ஆகியோர் நடித்த படங்களிலும் நடித்துள்ளார்.  

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் மயிலாப்பூர் வள்ளீஸ்வரன் தோட்டம் பகுதியில் காமராஜ் சாலையில் சங்கரமடத்துக்கு சொந்தமான இடத்தில் சங்கர நேத்ராலாயா கண் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. அந்த இடத்துக்குச் சென்ற பாலு இந்த மருத்துவமனை கட்டப்பட வேண்டும் என்றால் எனக்கு கமிஷன் தரவேண்டும் என்று மிரட்டியுள்ளார். ஒருவேளை கொடுக்கவில்லை என்றால் மாநகராட்சியிடமிருந்து பிரச்சனை வரும் என்று கூறியுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து அந்த மருத்துவமனைக்கு நெருக்கமானவரிடமிருந்து மு.க.ஸ்டாலினுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் மைலாப்பூர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மாவட்ட பிரதிநிதி ஆர்.பாலு குறித்தும் அவர் மருத்துவமனைக்கு கமிஷன் கேட்பது பற்றியும் கூறி, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய உளவுத்துறையினர் அவர்கள் சொன்னது உண்மைதான் என்ற விசயத்தை திமுக தலைமைக்கு கூறியது. 

இதன் தொடர்ச்சியாக மாவட்ட செயலாளரும் மயிலை சட்டமன்ற உறுப்பினருமான மயிலை வேலுவுக்கு அறிவாலயத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது. அழைப்பை எடுத்ததும் மைலாப்பூர் பாலு பற்றிய சம்பவத்தை கூறி அவரை கட்சியிலிருந்து நீக்கப்போகும் தகவலை கூறியுள்ளார்கள். அவரும் உடனே இதை ஒப்புக்கொள்ள அடுத்த சில நிமிடங்களில்  கலைஞர் தொலைக்காட்சியில் பாலு கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் ஒளிபரப்பானது. 

எப்போதும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் அது கட்சியின் அதிகாரப்பூரவ பத்திரிகையான முரசொலியில் தான் வெளிவரும். ஆனால் இந்த முறை அடுத்தநாள் வரை காத்திருக்காமல் உடனடியாக கலைஞர் டிவி வழியாக அறிவித்து அதிரடி காட்டியிருக்கிறது திமுக தலைமை.