அவர்கள் கட்சியில் என்னவோ செய்யட்டும்,. எங்கள் கட்சியில் ஏன் தலையிடுகிறார் ரங்கசாமி,. பயங்கர கடுப்பில் பாஜக.! 

அவர்கள் கட்சியில் என்னவோ செய்யட்டும்,. எங்கள் கட்சியில் ஏன் தலையிடுகிறார் ரங்கசாமி,. பயங்கர கடுப்பில் பாஜக.! 

தேஜ கூட்டணியில் பாஜக, அதிமுக, மற்றும் என்ஆர் காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. இதில், பாஜக ஆறு இடங்களிலும், என் ஆர் காங்கிரஸ் பத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. 

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதும் மே 7ஆம் தேதி, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மட்டும் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இவரை தொடர்ந்து எம்.எல்.ஏ,கள் மற்றும் நியமன எம்.எல்.ஏ,கள் கடந்த 26 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். ஆனால் இதுவரை அமைச்சர்கள் யாரும் பதவியேற்காததால் புதுச்சேரி அரசியல் இன்னும் முழுமையடையவில்லை. 

பாஜக தரப்பில் துணை முதல்வர் பதவி வழங்கவேண்டும் என வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு முதல்வர் ரங்கசாமி மறுப்பு தெரிவித்ததால், 2 முக்கிய அமைச்சரவை பதவி, சபாநாயகர் பதவி வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இதற்கு ரங்கசாமி ஒப்புக்கொண்டதால் பாஜகவை சேர்ந்த செல்வம் சபாநாயகராகப் பொறுப்பேற்றார். ஆனால் அமைச்சர்கள் தொடர்பாக ஏதும் முடிவுசெய்யப்படவில்லை. 

புதுவையில் அமைச்சர்கள் யாரும் பொறுப்பேற்காததற்கு முக்கிய காரணமாக தற்போது சொல்லப்படுவது புதுவை முதல்வர் ரங்கசாமியின் சோதிட நம்பிக்கை தான். அதன்படி தங்கள் கட்சியில் வெற்றிபெற்றவர்களில் யார் சிறந்த நிர்வாகி, மூத்தவர் என்று பார்க்காமல் அவர்கள் ஜாதகத்தை வைத்தே யார் அமைச்சர்கள் என்று பார்த்து வருகிறார். அமைச்சர் பதவிக்கு யார் ஜாதகம் சரியாக இருக்கிறதோ அவர்களே அமைச்சராவார்கள் என்று என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. 

இதிலும் மோசமாக தன் கட்சியைத் தாண்டி பாஜக எம்.எல்.ஏக்களின் ஜாதகத்தையும் கேட்டுள்ளார் ரங்கசாமி. அதில் யார் ஜாதகம் நன்றாக இருக்கிறதோ அவர்களை மட்டுமே தன் அமைச்சரவையில் சேர்க்கப்படும் என்றும் பாஜக தலைமைக்கு செய்தி சொல்லியுள்ளார். இதனால் பாஜக தலைமையும் அதிருப்தியாகியுள்ளது. அவர்கள் கட்சியில் என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும். நம் கட்சியில் ஏன் ரங்கசாமி தலையிடுகிறார் என்று பாஜகவிலே முனுமுனுப்புகள் வெளிவந்துள்ளன.