மே 7 முதல் ஜூன் 7ம் தேதி வரை,..முதல்வர் ஸ்டாலின் சாதித்தது என்ன?

மே 7 முதல் ஜூன் 7ம் தேதி வரை,..முதல்வர் ஸ்டாலின் சாதித்தது என்ன?

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. அதன்பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக மே 7ம் தேதி பொறுப்பேற்றார். அவர் ஆட்சி பொறுப்பேற்று இன்றோடு 1 மாதம் முடிவடைகிறது. இந்த ஒரு மாதத்தில் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் என்னென்ன என்பது பற்றிய ஒரு சிறிய தொகுப்பு.

*அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 4 ஆயிரம் ரூபாய் கரோனா நிவாரண நிதி

*ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்புசாதாரண கட்டணப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்

*உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை செயல்படுத்த புதிய துறை உருவாக்கம்

*கொரோனா பாதிக்கப்ப்டடவர்கள் தனியார் மருத்துவமனைகளில் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற ஏற்பாடு

*தென்சென்னையில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை

*ஆண்டுதோறும் 3 எழுத்தாளர்களுக்கு இலக்கயி மாமணி விருதுகரோனா காலத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை

*அரசின் விருது  பெற்ற எழுத்தாளர்களுக்கு அவர்கள் விரும்பும் மாவட்டத்தில்  இல்லம்

*மதுரையில் கருணாநிதி பெயரில் 70 கோடி ரூபாயில் நினைவு நூலகம்

*திருவாரூரில் 30 கோடி ரூபாயில் நெல் சேமிப்புக் கிடங்கு

*மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்

*போக்குவரத்து ஊழியர்களுக்கு 492 கோடி ரூபாய் ஓய்வுதிய பலன்கள்

*அர்ச்சகர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் மற்றும் மளிகை பொருள்கள் தொகுப்பு வழங்கும் திட்டம்

*பல்வேறு மாவட்டங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள், தடுப்பூசி முகாம்கள் தொடக்கம்

*சேலம், திருப்பூர், கோவை மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மே 20ஆம் தேதி ஆய்வு

*மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மே 21ஆம் தேதி ஆய்வு

*செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் தடுப்பூசி உற்பத்தி வளாகத்தில் மே 25ஆம் தேதி ஆய்வு

*காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மே 30, 31 ஆகிய இரு நாள்கள் ஆய்வு

*எழுவர் விடுதலை தொடர்பாகக் குடியரசுத் தலைவருக்குக் கடிதம்

*செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க அனுமதிக்கோரி மத்திய அரசுக்கு கடிதம்

*மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளைத் தொடங்கக் கடிதம்

*கருப்பு பூஞ்சைக்கு தடுப்பு மருதந்தைத் ஒதுக்ககோரி மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு கடிதம்

*நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தல்

*காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் கோரிக்கை

*அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகள் குறித்து ஆலோசனை

*புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை

*கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மருத்தவ நிபுணர்களுடன் ஆலோசனை

*முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருள்கள் பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி கிடைக்க ஆலோசனை

*பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிப்பது குறித்து ஆலோசனை

*கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் காணப்படும் மாவட்டங்களில் பரவலைக் கட்டுபடுத்த மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை

*ஊரடங்கு தளர்வு குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனைதடுப்பூசி உற்பத்தி குறித்து பாரத் பயோடெக் நிறுவனத்தினருடன் ஆலோசனை