இன்று மகாராஷ்டிர அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள்

சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே அணியினர் மும்பையில் உள்ள சிவசேனா பவனில் இன்று பிற்பகல் அதன் அனைத்து மாவட்டத் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இன்று மகாராஷ்டிர அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள்

கடந்த இருவாரமாக நடந்த அரசியல் குழப்பங்களைத் தாண்டி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அமைந்த புதிய அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது. இதனிடையே சபாநாயகர் ராகுல் நர்வேகர் சிவசேனாவின் கொறடாவாக ஏக்நாத் ஷிண்டே அணியச் சேர்ந்த பாரத் கோகவாலேவை அங்கீகரித்துள்ளார். இதனை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பினர் புதிய மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

1.புதிய கூட்டணி அரசாங்கம் மொத்தமுள்ள 288 வாக்குகளில் 164 வாக்குகளைப் பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி 99 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக, கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் அணி மாறினர். சட்டமன்ற உறுப்பினர் ஷியாம்சுந்தர் இன்று ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைந்தார்.

2.நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக, கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு சிவசேனா சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் அணி மாறினர். சட்டமன்ற உறுப்பினர் ஷியாம்சுந்தர் இன்று ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைந்தார்.

3.நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பு உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சந்தோஷ் பங்கர் ஷிண்டே அணிக்கு மாறியுள்ளார். தற்போது உத்தவ் தாக்கரே அணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 ஆக குறைந்துள்ளது. முன்னதாக ஏக்நாத் ஷிண்டே அணியில் 38 உறுப்பினர்கள் இருந்தனர்.

4.சிவசேனாவின் உத்தவ் தாக்கரே தரப்பினர், கட்சியின் புதிய கொறடாவை அங்கீகரிக்கும் சபாநாயகரின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை இன்று தாக்கல் செய்தனர்.

5.வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றம் அதை மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி தொடர்பான மற்ற நிலுவையில் உள்ள மனுக்களுடன் இணைத்து ஜூலை 11 அன்று நடக்கவிருக்கும் விசாரணைக்கு பட்டியலிட்டது.

6.முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரான பாஜகவின் ராகுல் நவ்ரேக்கர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாள் கழித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, உத்தவ் தாக்கரே கடந்த வாரம் ஷிண்டேவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தாலும், சபாநாயகர் ஷிண்டேவை மீண்டும் கட்சியின் சட்டமன்றத் தலைவராக நியமித்தார்.

7.சிவசேனாவுக்கு அதிகரித்து வரும் பிரச்சினையில், இன்று காலை ஷிண்டே அணியின் புதிய கொறடா, தனது உத்தரவை மீறியதாக உத்தவ் தாக்கரே அணியில் உள்ள கட்சியின் 16 சட்டமன்ற உறுப்பினர்களை இடை நீக்கம் செய்யக் கோரி சட்டமன்ற சபாநாயகரிடம் மனு கொடுத்தார். 16 சட்டமன்ற உறுப்பினர்களை இடை நீக்கம் செய்ய அறிக்கை அனுப்பப்படும் என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

8.இதற்கிடையில், சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே அணியினர் மும்பையில் உள்ள சிவசேனா பவனில் இன்று பிற்பகல் அதன் அனைத்து மாவட்டத் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

9.உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான ஷிண்டேவின் கலகம் இரண்டரை ஆண்டுகளுக்குள் அரசாங்கத்தை வீழ்த்தியது.

10.புதிய அரசாங்கம் பொறுப்பேற்றவுடன் அமைச்சரவையில் யார் யாருக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கப்படும் என்பது பலராலும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.