குரு விரைய ஸ்தானத்தில் பயணம்,.. 6 கோவில்களில் சிறப்பு பூஜை செய்த சசிகலா.! 

குரு விரைய ஸ்தானத்தில் பயணம்,.. 6 கோவில்களில் சிறப்பு பூஜை செய்த சசிகலா.! 

என்ன தான் எடப்பாடி பழனிசாமி பன்னீர் செல்வத்தையும், சசிகலாவையும் ஓரம் கட்டி கட்சியின் முக்கிய சக்தியாக வளர்ந்திருந்தாலும் இப்போதும் சசிகலா எப்போது என்ன செய்வார் என்று பீதியில் தான் இருக்கிறார். இதற்கு காரணம் அவர் உற்பட தற்போது பதிவியிலிருக்கும் பலர் சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் தான். அதனால் எப்போது யார் சசிகலா பக்கம் போவார்கள் என்ற அச்சவுணர்விலே எடப்பாடி இருக்கிறார்.

அதே போல இனி அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என சசிகலா கூறினாலும், அது உண்மை அல்ல என்பது சசிகலா பேசியதாக வெளிவந்த ஆடியோவில் இருந்தே தெரிந்தது. இந்த ஆடியோ வெளியானத்திலிருந்தே எடப்பாடி பழனிசாமி பதட்டத்தில் தான் இருக்கிறார். இதற்கு காரணம் இந்த ஆடியோ அதிமுகவில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் தான். 

இதுவரை 23 ஆடியோக்களை சசிகலா தரப்பு வெளியிட்டிருந்தாலும் சசிகலா இன்னும் நேரடியாக அரசியலில் களமிறங்கவில்லை. இதற்கு கொரோனா ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் ஜோதிடம் முக்கிய காரணம் என்கிறார்கள் சசி குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்கள். 

ஜெயலலிதா இருக்கும்போதே ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்  சசிகலா. அது அனைவருக்கும்  தெரியும். அவர் ஜோதிடர்களை கலந்தாலோசிக்காமல் எந்த காரியத்தையும் செய்வதில்லை. தற்போது அரசியலில் நேரடியாக இறங்கலாமா என்று ஜோதிடர்களிடம் கேட்கும் போது உங்கள் ஜாதகப்படி தற்போது குரு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இப்போதைக்கு அதிரடி செயல்பாடுகளுக்கு ஏற்ற காலம் இல்லை என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். 

இதன் காரணமாகவே தற்போது அரசியலில் இறங்காமல் இருக்கிறார். ஆனால் அதே நேரம் அமைதியாக இருக்காமல் ஆடியோக்களை வெளியிட்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கி வைத்துள்ளார் சசி. இப்பொது கொரோனா காலத்திலும் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில், பாபநாசம் கோவில்,  இராமநாதபுரம்  திருப்புல்லாணி ஆதி கேசவ பெருமாள் கோவில், இராமேஸ்வரர் இராமநாதசுவாமி கோவில்,  ஸ்ரீரங்கம் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் ஆகியவற்றுக்கும் சென்றுள்ளார். 

இனியும் பல கோவில்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறும் சசிகலா உறவினர்கள் செல்லும் இடங்களில் அதிமுக முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவை அதிகரித்து வருகிறார் என்றும், ஜோதிடர்கள் அனுமதி கொடுத்ததும் தீவிர அரசியலில் இறங்குவர் என்றும் கூறுகின்றனர்.