அதிமுக கூடாரத்தையே காலி பண்ண திட்டம் போடும் சசிகலா!! ஜெயலலிதா ஸ்டைலில் பக்கா பிளான்.! திரும்புமா 1988.?

அதிமுக கூடாரத்தையே காலி பண்ண திட்டம் போடும் சசிகலா!! ஜெயலலிதா ஸ்டைலில் பக்கா பிளான்.! திரும்புமா 1988.?

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த சில நாட்களில் உள்கட்சி மோதல் காரணமாக  அதிமுக இரண்டாக உடைந்தது. அதன்பின் அதிமுக ஒருங்கிணைந்தாலும் இன்று வரை அதில் உள்கட்சி மோதல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாதையில் தொண்டர்களை முன்வைத்து அரசியல் செய்து கட்சியை கைப்பற்ற முயல்கிறார் சசிகலா.

1989 இல் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார்.

அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளால் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக உடைந்தது. ஜானகி தரப்பில் எம்.ஆர்.வீரப்பன், அப்போதைய சபாநாயகர் பி.எச்.பாண்டியன் போன்ற வலிமைமிக்க அமைச்சர்கள் இருந்தனர். மேலும் அப்போது அதிமுகவுக்கு இருந்த 130 எம்.எல்.ஏக்களில் 97 பேர் ஜானகி அணியை ஆதரித்தனர்.

இந்நிலையில் போதிய பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ஜானகியை தமிழக முதல்வராக நியமித்தார் அப்போதைய தமிழக ஆளுநர் எஸ்.எல்.குரானா. அதைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நடைபெற்ற கூட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. சட்டமன்றத்தில் காவல்துறையினர் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்களை தாக்கினர். இந்த வன்முறை காரணமாக தமிழகத்தில் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலைக்கு உரிமை கோரியதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. 

இந்நிலையில் அதிமுகவின் பெரும்பான்மையான தலைவர்கள் ஜானகி பக்கம் நின்றதால், தொண்டர்கள் தன் பக்கம் திரட்டும் விதமாக அவர்களுக்கு கடிதம் எழுதினார் சசிகலா. இது அதிமுக தொண்டர்களை ஈர்க்க பெரும்பாலான அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா பக்கம் திரும்பினர். இதன் காரணமாக இரட்டை இலை  இல்லாமல் தேர்தலை சந்தித்த ஜெயலலிதா அணி 27 இடங்களில் வெற்றிபெற்று அதிமுக தொண்டர்கள் தன் பக்கமே இருக்கிறார்கள் என்பதை நிரூபித்தது. ஜானகி அணியோ வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. இப்படியாக அதிமுக ஜெயலலிதா கைகளில் முழுமையாக வந்தது. இந்த காலகட்டம் முழுவதும் சசிகலா ஜெயலலிதாவுடன் தான் இருந்தார்.

அப்போது நிலைமை அப்படியென்றால், இப்போது பெரும்பாலான அதிமுக தலைவர்கள் எடப்பாடி பக்கம் நிற்க தொண்டர்களை தன் திருப்பும் விதமாக ஜெயலலிதா மேற்கொண்ட அதே வழியை பின்பற்ற சசிகலா முடிவுசெய்துள்ளார். அப்போது ஜெயலலிதா தொண்டர்களுக்கு கடிதம் எழுத, சசிகலாவோ தொண்டர்களிடம் நேரடியாக தொலைபேசியில் பேசுகிறார். இது வரை 5 ஆயிரம் தொண்டர்களிடம் சசிகலா பேசியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் 1987 இல் தொண்டர்கள் ஜெயலலிதா பக்கம் திரும்பியது போல இப்போதும் தொண்டர்கள் சசிகலா பக்கம் திரும்புவர்களா? இல்லை தலைவர்களைப் பின்பற்றி தொண்டர்களும் எடப்பாடியின் பின் நிற்பார்களா என்பது வரும் காலத்தில் தான் தெரியவரும்