12 ஆம் தேதிக்கு அப்புறம் பயங்கர சம்பவம் இருக்கு... அக்கா சமாதிக்கு போறோம் ஆட்டத்தை ஆரம்பிக்கிறோம்!!

கொரோனா ஊரடங்கு வரும் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் அதன் பின்னர் பொதுமக்களை சந்திப்பேன் என சசிகலா தெரிவித்துள்ளது அதிமுக தலைமை இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.  

12 ஆம் தேதிக்கு அப்புறம் பயங்கர சம்பவம் இருக்கு... அக்கா சமாதிக்கு போறோம் ஆட்டத்தை ஆரம்பிக்கிறோம்!!

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துவிட்டு சிறையில் இருந்து வெளிவந்ததும் இனி சசிகலா அரசியலில் தீவிரமாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைதியாக இருந்த அவர் தேர்தலை ஒட்டி அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்று அறிவித்தார். சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவி எதிர்க்கட்சியானதும் ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவுக்கு அதிர்ச்சியலைகளை கொடுத்து வருகிறார்.

ஆரம்பத்தில் சசிகலாவிடம் பேசியவர்கள் அதிமுகவினரே அல்ல, அவர்கள் அனைவரும் அமமுகவினர் தான் என்று கே.பி.முனுசாமி மூலம் பேசவைத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் என பலர் வெளிப்படையாகவே சசிகலாவிடம் பேச வேறு வழியே இன்றி  ஒருகட்டத்தில் சசிகலாவோடு பேசிய அதிமுக தொண்டர்களை கட்சியிலிருந்து நீக்கினர் பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும். இப்படி சசிகலாவிடம் பேசியவர்களை கட்சியிலிருந்து நீக்கியதும் மற்றவர்கள் பயந்துகொண்டு சசிகலாவிடம் பேசமாட்டார்கள் என்று நினைத்தது அதிமுக தலைமை. 

எனினும் சசிகலா தனக்குக் கடிதம் எழுதும் கட்சி நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். அவ்வாறு நிர்வாகிகளுடன் பேசும் ஆடியோ வெளியாகி பெரும் பேசு பொருளாக மாறி வருகிறது. அந்த வகையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். ஏழுமலையிடம் நேற்று சசிகலா பேசியுள்ளார். அதில் வழக்கம் போல் கட்சியை மீட்டு விடலாம், விரைவில் மக்களை சந்திப்பேன் என்ற பேச்சுகள் இடம்பெற்றிருந்தன.

தற்போது கூடுதலாக கொரோனா ஊரடங்கு 12-ந் தேதி வரைக்கும் சொல்லி இருப்பதால், அதற்கு பின்னர் மக்களை சந்திப்பேன் என சசிகலா தெரிவித்துள்ளார். அதிலும், முதலில் ஜெயலலிதா சமாதிக்கு போயிட்டு அதுக்கப்புறம் நான் எல்லோரையும் பார்க்கிறேன். கவலைப்படாதீர்கள். எல்லாத்தையும் சரி பண்ணிடுறேன். அ.தி.மு.க.வை நான் வழி நடத்துவது நிச்சயம் நடக்கும் என அதிரடியாக பேசியுள்ளார்.